பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

மிஞ்சி நின்ற மற்றவர்கள் மிட்டாயிக்காரனிடம் நிரம்பவும் அநுதாபமாகவும், விசனகரமாகவும் இரக்கமாகவும் பேசத் தொடங்கி, "ஐயா! கடைக்காரரே இன்று உம்மை விட்டு விடுகிறோம்; நாளைக்காவது நீர் தட்டு நிறைய மிட்டாயி கொண்டுவாரும். அதன் விலை எவ்வளவானாலும், உடனே கொடுத்து விட்டு நாங்கள் எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ளுகிறோம். என்ன இருந்தாலும், அந்த அயோக்கியன் உம்முடைய காசை எடுத்துக்கொண்டு போனது தப்பிதம்தான். நீர் இவ்விடத்திலேயே இரும். நாங்கள் போய் அவனைப் பிடித்து, உம்முடைய காசை வாங்கிக்கொண்டு வந்து உம்மிடம் கொடுத்துவிட்டுப் போகிறோம்" என்று ஆறுதல் மொழி கூறிவிட்டு அப்பால் நழுவிப் போய் விட்டனர்.

அவ்வாறு போனவர்களுள், தன் பழைய எஜமானரான தாசில்தாருடைய அடையாளங்கள் கொண்ட ஒரு மனிதரும் இருந்ததாக நமது சமயற்காரன் உணர்ந்தான். அந்தத் தாசில்தார் தமது வேலையை இழந்த பிறகு கண்ணியமான தொழில் எதையும் செய்யமாட்டாமல், தம்மிடமிருந்த சொத்தை அபிவிருத்தி செய்ய எத்தனித்து சூதாட்டத்தில் இறங்கினார். அப்படி இறங்கியதில், அவரிடமிருந்த சொத்து முழுவதும் அடியோடு போய்விட்டது. அவர் தமது கண்ணியத்தையும் நாணயத்தையும் விட்டு அந்த முடிச்சு மாறிக் கும்பலில் சேர்ந்துகொண்டார். உண்மையில் அவரே நமது சமயற்காரனுடைய பழைய எஜமானராயினும், அவரே எவ்விதமான இழி தொழிலில் இறங்கமாட்டாரென்று நமது சமயற்காரன் எண்ணி, அது வேறே யாரோ ஒருவர் என்று நினைத்துக் கொண்டான்.

அவர்கள் எல்லோரும் கடைத் தெருவில் ஜனங்கள் நட மாட்டமிருந்த காலத்தில் அவ்வாறு தனது பொருளைக் கொள்ளை அடித்துச் சென்றதை நினைக்க நினைக்க நமது சமயற்காரன், "என்ன ஆச்சரியம் இது! இந்த ராஜ்யத்தில் கேள்விமுறை இல்லையா? புதிதாய் வந்த திவான் மகாராஜனுடைய அரண் மனையில் சிப்பந்திகள் கொள்ளையடிக்கிறார்களென்று அவர்களுள் பலரை வேலையிலிருந்து தகையர் செய்து விட்டு, நிரம்பவும் கண்டிப்பான முறைகளை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வந்திருக்

29