பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பூர்ணசந்திரோதயம்-2 நேற்றிரவு உன்னைவிட்டு திடீரென்று நான்புறப்பட்டுப் போன நினைவு உண்டாயிற்று. அதுவும் தவிர, உன் விஷயத்தில் அக்கிரமம் செய்தவர்கள் யார் என்பதை அறிந்து அவர்களைத் தக்கபடி சிகழித்து அவர்கள் இனி உன்னைப்பற்றிக் கனவிலும் நினையாதபடி செய்யவேண்டும் என்ற எண்ணமும் உண்டாயிற்று. இறந்துபோனவனுக்கு நான் இனி எவ்வித உதவியும் செய்யமுடியாது. ஆகையால், உயிரோடு இருக்கும் மனிதருக்காவது நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம் என்று நினைத்து உடனே புறப்பட்டு ஒட்டமாக ஓடிவந்தேன்' என்று கரைகடந்ததுயரத்தோடு உருக்கமாகக் கூறினான். அந்த மகா துக்ககரமான வரலாற்றைக் கேட்ட நமது யெளவனப் பெண்ணரசி, மிகுந்த கலக்கமும் துயரமும் சஞ்சலமும் அடைந்தவளாய்ப் பேசத் தொடங்கி, 'அடடா! என்ன கஷ்டம் என்ன கஷ்டம்! தாங்கள் சொன்ன வரலாற்றைக் கேட்க, என்மனம் தவிக்கிறது. மகாபாவியான எனக்குத் தாங்கள் உதவி செய்யப் போக, தங்கள் அருமை நண்பருக்குத் தங்களுடைய முகவிழிப்புக்கூடக் கிடைக்காமல் போனதுதான் முதல் பலன் போலிருக்கிறது! நான் தங்களை நிரம் பவும் துன்பத்துக்கு ஆளாக்கியதன்றி, தங்கள் விஷயத்தில் இரண்டு விதத்தில் அபராதியானேன். அதோடு மாத்திரம் நிற்காமல், இப்போது தங்களுடைய நண்பரின் ஆத்துமாவும் என்னைத் துாற்றிச் சபித்துக் கொண்டிருக்கும்படியான பாவ மூட்டையை யும் தேடிக் கொண்டேன்; நான் என்ன செய்வேன்? எனக்குத் தெரியாமலேயே இப்படிப்பட்டதுன்பங்களும், துயரங்களும், பாவங்களும் எனக்கு வந்து நேருகின்றன. நான் முன் ஜென்மத்தில் என்னவிதமான கொடிய பாதகம் செய்தேனோ தெரியவில்லை' என்று மட்டுக்கடங்கா மனோவேதனை அடைந்தவளாய் மொழிந்தாள். அதைக் கேட்ட கலியாணசுந்தரம் என்ற அந்த யெளவன வடிவழகன், "அம்மா! நீ இவ்வளவுதூரம் மனங்கலங்கி சங்கடப்