பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

வரையில் ஜீவகாருண்யத்தையும் நீதியையும் அநுசரித்து சகலமான நடவடிக்கைகளையும் நடத்தி இருக்கவேண்டும். ஒருவன் செய்த குற்றத்தை மெய்ப்பிக்க சாட்சியில்லை என்ற காரணத்தினாலேயே, வாதியின் வழக்கை அலட்சியமாக மதித்துத் தள்ளி விடுவது அடாது. அப்படி இவர் அந்த வழக்கைத் தள்ளுவதால், அந்த வாதிக்கு, தன்னுடைய குடும்ப வாழ்க்கையே சீர்குலைந்து போகலாம். அவனைச் சார்ந்த மனிதர்கள் ஜீவனோபாயத்திற்கு வகையின்றி இறந்து போகலாம். இன்னும் அதிலிருந்து கணக்கற்ற துன்பங்களும் துயரமும் நேரலாம். அப்படி இவர் இராஜ நிர்வாகம் செய்தால், இவர் எத்தனை வழக்குகளில் அநியாயமாக நடந்துகொள்ள நேர்ந்ததோ, அத்தனை வழக்குகளிலும் இவருக்கு ஏராளமான பகைவர்கள் ஏற்படுவதும் சகஜமே. அவர்களுள் நமது திவான் லொடபட சிங் பகதூரைப் போன்ற யுக்திமான்கள் பலர் இருப்பார்களானால், சட்டமொன்றையே ஆதாரமாகக் கொண்டு தெப்பம்போல மிதக்கும் இந்த உயிரற்ற இராஜாங்க நிர்வாகத்தை ஒரே நொடியில் தலைகீழாய்க் கவிழ்த்து விடுவார்கள் என்பதை நான் எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. மகாராஜனே! இப்போது தாங்கள் வெளியிட்ட தீர்மானத்தில், முக்கியமான இரண்டொரு விஷயங்கள் சொல்லப்படவில்லை. இந்த நக ரத்துக் குடிமக்களுள் நானும் ஒருவன். அரூபியாக இருந்து இந்தப் பத்துவருஷ காலமாய் எங்களிடத்திலிருந்து திவான் லொடபட சிங் பகதூர் சட்டத்திற்குப் புறம்பாக லக்ஷக்கணக்கில் பொருளை வசூலித்திருக்கிறார். அவரால் ஏற்படுத்தப்பட்ட கச்சேரியிலிருந்து அபகரிக்கப்பட்ட பொருளைத் தங்கள் கஜானாவில் சேர்க்கும்படி உத்தரவு செய்தீர்கள். எங்களிடமிருந்து வசூல் செய்யப்பட் டிருக்கும் பொருளெல்லாம் எங்களிடம் வந்து சேரும்படி தாங்கள் உத்தரவு பிறப்பிக்கவேண்டும். அதுவுமன்றி, இனியும் தாங்கள் இந்த ராஜ்யத்தை இப்படி சட்ட ஆதாரம் ஒன்றையே வைத்துக் கொண்டு நடத்திக்கொண்டுபோனால், மறுபடி இந்த நகரத்தில் இதுபோன்ற ஜெகஜாலக் கொள்ளைகள் நடக்காமல் எங்களைப் பாதுகாப்பதற்குத் தாங்கள் என்னவிதமான உபாயம் தேட உத்தேசிக்கிறீர்கள் என்பதும் சொல்லப்படவில்லை. இப்படிப்பட்ட அக்கிரமங்களுக்கு உள்படாமல் இந்த ஊரில் எப்படி

75