பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 73 யெளவனப் புருஷர் இப்போது கடைசியாகப் பேசிய வார்த்தைகளிலிருந்து அவரே தன்னை முதல் நாள் காப்பாற்றிய மகா பராக்கிரமசாலியான நற் குண புருஷரென்பது நிச்சயமாயிற்று. இருவர்களது குரல்களும் ஒன்றாயிருப்பதாக அப்போதே அவள் உணர்ந்தாள். அவனது அபூர்வமான தேக அமைப்பையும், வசீகரத் தன்மையையும் உத்தம லக்ஷணங் களையும் காணக்காண, அப்படிப்பட்ட அதிபாலியரான புருஷர் அத்தனை முரட்டு மனிதர்களோடு வீராவேசத்தோடு சண்டை செய்து அவர்களைச் சிதற அடித்தாரென்ற விஷயம் சிறிதும் நம்பத்தகாததாகவும், மகா ஆச்சரியகரமான சங்கதியாகவும் இருந்தது. கட்டுக்கடங்கா நாணமும், வெட்கமும், இன்பமும், துன்பமும், வியப்பும், பிரமிப்பும் எழுந்து அவளை வளைத்துக் கொண்டன. அவர் அவ்வளவு யெளவனப் பருவத்தினராக இருப்பதனாலேதான் முதல்நாள் இரவில் தன்னுடைய பங்களாவிற்குள் வரவெட்கி வாசலிலிருந்தபடியே போயிருப்பாரோ என்ற எண்ணம் உண்டாயிற்று. அப்படிப்பட்ட மனமோகனசுந்தர புருஷரோடு தான் மாத்திரம் தனியாக இருந்து பேசியது அவளது மனதிலும் தேகத்திலும் தடுக்க இயலாத தடுமாற்றத்தையும் சஞ்சலத்தையும் உண்டாக்கியது. அந்தச் சந்தர்ப்பத்தில் தனது வேலைக்காரி இல்லாமல் போய்விட்டாளே என்ற ஏக்கமும் தோன்றியது. இருந்தாலும், தான் முதல் நாள் மெளனமாக உள்ளே வந்து ஏமாறிப் போனது போல அன்றைய தினமும் நாணமுற்று அவரோடு பேசாதிருந்தால், அந்தத் தயாளகுண வள்ளல் மனமுடைந்து தன்னை இனி பார்க்கவே கூடாது என்ற உறுதி செய்து கொண்டு திரும்பிப் போய் விடுவார் என்று பயந்தவளாய் நாணத்தோடும், மிகுந்த மரியாதையோடும், அடக்க ஒடுக்கத்தோடும் மறைவாக இருந்து தனது முகத்தில் சிறிதளவு வெளியில் நீட்டியபடி பேசத் தொடங்கி, 'என் விஷயத்தில் நேற்றிரவு எவ்வளவோ பாடுபட்டுத்தங்களுடைய உயிரையே ஒரு திரணமாக மதித்து மகா செளகரியமான