பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

மூலம் உண்மை வெளியாகாதவாறு காப்பாற்ற முடியும் என்று எண்ணினர். வேறு சில மன்னர்கள் மிகவும் நம்பிக்கையான ஒரு சிற்பியை மட்டும், சமாதி வேலைக்குப் பயன்படுத்திக் கொண்டனர். இவ்வாறு பலவித முறைகளைக் கொண்டு, புதைக்கப்பட்ட செல்வமும், முன்னோர்களின் பிணமும் அழியாதவாறு காக்கப் பெரு முயற்சி செய்தனர் பாரோ மன்னர்கள். ஆனால் என்ன செய்தும், கள்வர்களின் கழுகுக் கண்களிலிருந்து இவை தப்ப முடியவில்லை.

ஒரு முறை சமாதிப் பள்ளத்தாக்கின் காவல் அதிகாரியாகப் பீரோ என்பவன் இருந்தான். வேலியே பயிரை மேய்வது போல், இவனே சமாதிகளைக் கொள்ளையிடத் தொடங்கினான். இத்திருட்டு எப்படியோ வெளியாகி, இறுதியில் மன்னரின் காதுகளையும் எட்டிவிட்டது. பீரோ கைது செய்யப்பட்டு அரசவையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டான். தனக்கும் சமாதித் திருட்டுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று முதலில் அவன் சாதித்தான். அரசவையில் இருந்த காவலர்கள் அவனை நையப் புடைத்தனர். பிறகு அவன் வாயிலிருந்து உண்மை பின் கண்டவாறு வெளிப்பட்டது:

தெய்வத்தன்மை பொருந்திய மன்னர் பெருமானே! நான் சமாதித் திருட்டில் ஈடுபட்டது உண்மை. பள்ளத்தாக்கின் வடக்குப் பகுதியிலிருந்த சமாதியொன்றை நான் கொள்ளையடித்தேன். இக் கொள்ளையில் என்னோடு இன்னும் எழுவர் ஈடுபட்டனர். முதலில் சவப்பெட்டியின்