பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12


சிற்பிகளின் தலைவன் வகுத்துக் கொடுத்த அளவிலும் வடிவத்திலும், துணைச் சிற்பிகள் கற்களைச் செதுக்கிச் செப்பனிட்டு மெருகிடுவர். கோவில் எழுப்பக் குறித்திருந்த இடத்தைச் சுற்றிக் கல்லுளிகளின் ஓசையும், கற்களைச் சுமந்து செல்லும் கூலியாட்களின் ஏலப் பாட்டும், மிகவும் பாரமான கற்களை இழுத்துச் செல்லும் யானைகளின் பிளிற்றொலியும், பணியாளர்க்கு மோர் விற்கும் ஆய்ச்சியர் கூவும் பண்டமாற்றொலியும், மற்றும் பலவகை ஒலிகளும் முழங்கிக்கொண்டிருக்கும்.

நாற்சதுரமான அடித்தளத்தின்மீது கருவறை அமைக்கப்பட்டது. அதைச் சுற்றித் திருச்சுற்றும் அமைக்கப்பட்டது. கருவறைக்கு எதிரில் 58* மீட்டர் நீளமும் 321 மீட்டர் அகலமும் உடைய மண்டபம் அமைக்கப்பட்டது. கருவறைக்குக் குறித்திருந்த நாற்சதுரமான அடித்தளத்திலும், அதற்கு முன்னிலையில் எழுப்பிய மண்டபத் தளத்திலும் நிறுத்தவேண்டிய தூண்கள், அமைக்க வேண்டிய சுவர்கள் யாவும் தத்தமக்குரிய இடங்களில் அமைக்கப்பட்டபின் பணியாளர் கட்டி, முடித்த அளவிற்கு மணலைக் கொட்டி மூடிச் சாரம் அமைத்தனர். கட்டடம் வளர வளரச் சாரமேடும் வளர்ந்தது.

கருவறையின் முன் மண்டபத்தைக் கல்லால் மூடிச் சாந்து பூசியதும், அதனையும் மணல்மேடு மூடியது, கருவறைக்குமேல் கோபுரம் நாள்தோறும் வளர்ந்து கொண்டு வந்தது. தமிழகத்திலுள்ள மற்றக் கோவில்களில் அமைந்துள்ள கோபுரங்களி-