பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

மூடியைக் கழற்றினோம். அதில் இறந்த மன்னரின் பிணம் காணப்பட்டது. மன்னரின் முகம் தங்கமுக மூடியால் போர்த்தப்பட்டிருந்தது. உடல் வெள்ளித் தகட்டினால் போர்த்தப்பட்டிருந்தது. வெள்ளித் தகட்டின்மேல் தங்கத் தகடு போர்த்தப்பட்டிருந்தது. தங்கத்தகட்டில் விலைமதிப்பற்ற மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. கழுத்தில் பொன்னரி மாலைகள் பல பூட்டப்பட்டிருந்தன. அம்மாலைகளை முதலில் கழற்றினோம். தங்கத் தகட்டின்மேல் பதிக்கப்பெற்றிருந்த மாணிக்கக் கற்களைப் பெயர்த் தெடுத்தோம். பிறகு உடலை ஒட்டிக்கிடந்த வெள்ளியையும் தங்கத்தையும் பெயர்த்தெடுத்தோம். அரசரின் பிணத்திற்கருகில் அரசியாரின் பிணம் காணப்பட்டது. அதன் கழுத்திலும் தங்கச் சரங்கள் நிறையப் பூட்டப்பட்டிருந்தன. அரசருடைய உடலுக்குப் போர்த்தப்பட்டிருந்தாற்போல், அரசியாரின் உடலுக்கும் தங்கத்தினாலும், வெள்ளியினாலுமான தகடுகள் போர்த்தப்பட்டிருந்தன. அவைகளையும் நாங்கள் எடுத்துக் கொண்டோம். இவ்விரண்டு பிணங்களுக்கும் அருகில் தங்கத்தாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட பலவிதப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அவைகளும் எங்களால் களவாடப்பட்டன. பிறகு களவாடிய பொருள்களை எட்டுப் பங்காகப் பிரித்து ஆளுக்கொரு பங்கு வைத்துக் கொண்டோம்.”

இவ்வாறு தன் கொள்ளையைப்பற்றி விளக்கமாகக் கூறினான் பீரோ. பீரோ கூறிய செய்திகளிலிருந்து நாம் பல உண்மைகளை அறிந்து கொள்ள-