பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

முற்றுப் பெற்றது. தன் முன்னோரால் சாதிக்க முடியாத பெருஞ்செயலைச் சாதித்து முடித்த குத்புதீன் அவ்வெற்றிப் புகழ் என்றும் நிலைத்திருக்குமாறு செய்ய விரும்பினான். அவ்விருப்பத்தின் விளைவாக எழுந்த வெற்றிச் சின்னமே குதுப்மினார்.

குதுப்மினார் உலகிலேயே மிக உயர்ந்த கோபுரமென்று நாம் கண்டோம். இதன் உச்சியில் ஏறி நிற்கும் ஒருவன் உரக்கக் கூவினால்கூட, இதன் அடியில் நிற்பவனின் காதில் அச்சத்தம் விழாது. இவ்வுயர்ந்த கோபுரத்தை வெற்றியின் சின்னமாகத்தான் குத்புதீன் எழுப்பினான் என்பதற்கு வேறு சில சான்றுகளும் உண்டு. இந்திய நாட்டைப் பதினேழு முறை கொள்ளையடித்துச் சென்ற கஜ்னி மாமூது, தன் தலைநகரான கஜ்னி மாநகரில் இதைப் போன்றே, ஒரு கோபுரத்தைத் தன் வெற்றியின் சின்னமாக எழுப்பினான். கோரி முகம்மதுவும் வெற்றிச் சின்னமாகக் கோரி நகரில் ஒரு கோபுரத்தை எழுப்பினான். தன் முன்னோர்களைப் பின் பற்றிக் குத்புதீனும் டில்லியில் குதுப்மினாரை எழுப்பியிருக்கவேண்டும்.

கோரி முகம்மது டில்லியைக் கைப்பற்றுவதற்கு முன்பாக இப்பெரு நகரில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த இராசபுத்திர வீரன் பிருதிவி. அவனோ அல்லது அவன் மாமனான விக்கிரக ராஜாவோ, தோமார் இராசபுத்திரர்களிடமிருந்து டில்லியைக் கைப்பற்றிய அவ்வெற்றியின் சின்னமாக இக்கோபுரத்தை எழுப்பியிருக்கலாம் என்று சில வரலாற்-