பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ. என்று உள்ளக் கருத்தை உடைத்துச் சொன்ன போதும் நாம் வேட்டுவப் பெண்ணின் உருவில், ஒரு புரட்சிக் காரியைப் பார்க்கின்றோம். இறுதியில் பாவேந்தரின் ஏக்கம் குப்பன் வாய்மொழியாக வெளிவருகிறது. நல்ல இமயம், நலங்கொழிக்கும் கங்கைநதி வெல்லத் தமிழ்நாட்டின் மேன்மைப் பொதியமலை செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள், தின்னக் கனிகள் தெவிட்டாத பயன்மரங்கள் இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில் முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன? செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன? மூடப் பழக்கம், முடிவற்ற கண்ணுறக்கம் ஒடுவதென்றோ? உயர்வதென்றோ? நானறியேன். சஞ்சீவி பர்வதத்தின் சாரல், அங்கதப் போக்கில் தனித்தன்மை வாய்ந்தது. மேலை நாட்டு அங்கதக் காப்பியங்களுக்கு எந்த விதத்திலும் தாழ்ந்ததன்று. இதில் பாவேந்தர் கையாண்டிருக்கும் உத்திகள் எந்தத் தமிழ்க் கவிஞராலும் இன்றுவரை கையாளப்படவில்லை. இஃது அவருக்கு வெற்றிக்காப்பியம். 5 தமிழ் இலக்கிய வரலாற்றில் பாவேந்தரின் குடும்ப விளக்குக்குத் தனியிடம் உண்டு. குடும்ப வாழ்வைச் சிறப்பித்துப் பாடும் கற்பியல் தனிப்பாடல்கள் சங்க இலக்கியத்தில் நிறைய உண்டு. வள்ளுவர் குடும்ப வாழ்க்கையை இல்லறவியல் என்று ஒர் இயலாகப் பாடினார். ஆனால் குடும்ப வாழ்க்கையை ஒரு காப்பியமாகத் தமிழில் பாடிய முதற்பெருமை பாவேந்தரையே சாரும்.