பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104


வரின் மாளிகையிலும், புனித பீட்டர் கோவிலிலும் இக்கலைச் செல்வங்கள் யாவும் தொகுக்கப் பெற்றுக் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டுள்ளன. கிரேக்க நாட்டுக் கலைச்செல்வங்களே இங்கு ஏராளமாக உள்ளன.

இக்கோவிலில் வண்ண வளைவுகளும், பகுதி பகுதிகளாக அமைக்கப்பட்ட மண்டபங்களும், நயமான செதுக்கு வேலையுடன் கூடிய உயர்ந்த தூண்களும் நிறைய உள்ளன. கிரேக்கர்களின் அரிய படைப்புக்களான மனித உருவப் படங்களும், வெள்ளைப் பளிங்கிலும் வண்ணப் பளிங்கிலும் தீட்டப்பட்ட உயிரினங்களின் வடிவங்களும், இராஃபியேல் போன்ற இத்தாலிய மேதைகளால் தீட்டப்பெற்ற 463 ஓவியங்களும் நம்மை வியப்பிலாழ்த்தும் கலைப்பொருள்களாக உள்ளன, 5 மீட்டர் உயரமுள்ள பளிங்குச் சிலைகள் பலவற்றை இங்குக் காணலாம். வாத்திகன் நகரத்தைச் சில மணித்துளிகளில் நடந்து கடந்து விடலாம். ஆனால் இங்குள்ள கலைச் செல்வங்களைக் கண்டு மகிழப் பல்லாண்டுகள் வேண்டும்.