பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் கடிமலர் வண்டுகள் நெடிது பாடத், தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில் அடியெடுத் துான்றி அங்கம் புளகித்து ஆடுகின்றாய் அழகிய மயிலே! ஆடற்கலைக்குப் பாவமும், அடைவும் முக்கியம். அந்நாட்டியப் பண்புகளை மயிற்புறாவிடம் கண்டு மகிழ்கிறார் பாரதிதாசன். மயிற்புறா படம் விரிக்கும்; மார்பினை முன் உயர்த்தும்; நயப்புறு கழுத்தை வாங்கி நன்றாக நிமிர்ந்து, காலைப் பயிற்றிடும் ஆடல் நூலின் படி, தூக்கி அடைவு போடும்; மயிற்புறா வெண்சங்கு ஒக்கும்; வால் தந்த விசிறி ஒக்கும்! 146D6SI6 îıusio (Romanticism) பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய புதிய இலக்கியக் கொள்கை புனைவியல் கோட்பாடு இக்கோட்பாட்டாளர்கள் சமுதாயம், அரசியல், பொருளியல் ஆகியவற்றுள் குடிகொண்டிருந்த பழைய மரபுகளை எதிர்க்கத் தொடங்கினர்; மாற்றிவிடத் துடித்தனர். பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட ரூசோவின் புதிய கோட்பாடுகள் மனிதனின் தனித்தன்மையையும், ஆற்றலையும் சிறப்பித்துப் பேசின. சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை என்ற மும்முனைக் கொள்கை ஐரோப்பாவில் வேகமாகப் பரவியது. இவற்றின் அடிப்படையில் தோன்றிப் பலவாகிக் கிளைத்த சிந்தனைகளின் தாக்கமே இலக்கியத்தில் புனைவியலைத் தோற்றுவித்தது. தமிழகத்தில் புனைவியலை முதன்முதலாகச் சோதித்துப் பார்த்தவன் பாரதி. அதைப் பரப்பியவர் பாரதிதாசன்.