பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் பதிப்புரை மனித நெஞ்சங்களைப் பண்படுத்தி மாண்புறச் செய்வது இலக்கியம். இலக்கியங்கள் பூஞ்சோலைகள். புறாக்களும் மானும் மயிலும் குயிலும் தேன்சிட்டுகளும் நிறைந்த இயற்கையின் எழிலாட்சி நடத்தும் பூங்காக்கள் இன்பம் தருவன. கண்களுக்கு விருந்தாகும்போதே கருத்திலே சத்துாட்டமாகவும் ஊறிப் பயன் வளர்க்கிறது இயற்கை. கவிஞர்களின் பார்வையும் எண்ணமும் கவிதைமலர்களாய் மலர்கின்றன. மென்மையும் வண்ணமும் தோற்றமும் மிடைந்து மிளிரும் கவிமலர்களை மலரச் செய்யும் மாபெரும் திறன் கவிஞர்களிடம் அமைந்துவிடுகிறது. பாரதியாரைப் பாராதோர் பாரதிதாசனாரைப் பார்த்தனர். அவரது அடிச்சுவட்டில் கவிஞர்கள் பலர் அணி வகுத்தனர். தமிழகம் கண்டது புதுமை பெருமை! பாட்டுள்ளங்கள் நாட்டுள்ளங்கள்; மக்களை நெறிப்படுத்தும் ஏட்டு உள்ளங்கள், கவியுள்ளங்கள்! கவியுள்ளமும் கனிவுள்ளமும் கொண்டவர் முருகு சுந்தரம் அவர்கள். இவர் சேலத்துச் சுவைமாங்கனி! பாட்டுலகின் வேட்டைக்காரர். பண்புக்கமைந்த பாட்டைக்காரர், செந்தமிழ்த் தோட்டக்காரர். தேர்ந்த சுவைஞரான சேலத்துக் கவிஞர் நாடறிந்தவர். பல நூல் பயின்றவாறே பல நூல்களையும் தந்து வருபவர். வெள்ளையானையை வளர்த்துவிட்ட வள்ள்ல் இவர். குமுகாயச் சிந்தனையில் கொள்கையுடன் வாழ்ந்து வருபவர். நிகழ்வுகளின் நெருக்கத்தில் நெஞ்சச் சுமைகளை நிரல்பட எடுத்து வைப்பதில் நிகரற்றவர். அலையாடும் நெஞ்சில் விளையாடும் முத்துகளே நிலையான மாலைகளாயின. விலைபோகும் என்பதால் வெளிப்படுகின்றன. உள்நாடும் வெளிநாடும் உள்ளங்களால் உறவாகின்றன. ஒருலகம் ஒரு குடும்பம் எனச் சுருங்குகிறது. மனித நேயமும்