பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ)- முருகு சந்தரம் -இ வழிந்தால், பகல் தன் கண்களை மூடிக் கொள்கிறது என்று குறிப்பிடுகின்றான். உலகப் பெருங் கவிஞன் ஷேக்ஸ்பியபின் காதற் காவியமான ரோமியோ ஜூலியத்தில் நைட்டிங்கேலும், லார்க் என்ற பறவையும் ஓரிடத்தில் குறிப்பிடப்படுகின்றன. ரோமியோ ஒருநாள் இரவில் கள்ளத்தனமாகத் தன் காதலியைச் சந்திக்கிறான். இரவு அவர்களுக்கு வேகமாகக் கழிகிறது. கிழக்கு வெளுக்கிறது. பறவைகளின் ஒலியைக் கேட்டு, அவசரமாகத் தன் காதலியிடம் விடைபெறுகிறான் ரோமியோ, அப்போது ஜூலியட், “அன்பே தன் குரலால் உங்கள் காதைக்கிழிப்பது, விடியலில் பாடும் லார்க் அன்று; இரவில் பாடும் நைட்டிங்கேல்' என்று சொல்லி அவனைத் தடுக்கிறாள். எனவே நைட்டிங்கேல் இரவிலும், லார்க் விடியலிலும் பாடும் பறவைகள் என்பது தெரிகிறது. கக்கூ மாலை நேரத்தில் பாடும் பறவை. தமிழ் இலக்கியங்களில் குயிலும், மயிலும், கிள்ளையும் இடம் பெற்ற அளவு வானம்பாடி இடம் பெறவில்லை. வானம்பாடியைப்பற்றிப் பாரதிதாசன் தான் பாடியுள்ளார். சிட்டுக்குருவியைப் பற்றிப் பாரதி, பாரதிதாசன் இருவருமே பாடியிருக்கின்றனர். காதலரைப் பிரிக்கும் வன்னெஞ்சப் பறவையாகக் கோழி சங்கப் பாடலிலும், பிற்காலப் புலவர்கள் பாடலிலும் இடம் பெற்றுள்ளது. புறாவைப் பற்றி, இறவாத பாடல்களை எழுதிக் குவித்திருக்கிறார் பாரதிதாசன். கவிஞனும் இயற்கையும் இயற்கையை” "அழியாத மண்ணின் கவிதை” என்று கீட்சு பாடுகிறான். இதிலிருந்து கவிஞனுக்கும்