பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் அது போராடிப் பெறக்கூடியது' என்பதை விளக்குகிறார் கவிஞர். அந்நியர் ஆட்சியில் அவர்கள் வழங்கும் வசதி வாய்ப்புகளை நுகர்ந்து கொண்டு, அடிமை வாழ்வு வாழ்பவர்களையும், அவர்கள் உள்ளத்தின் ஆழத்தில் பதுங்கியிருக்கும் அச்சம் கலந்த விடுதலை வேட்கையையும் பாரதிதாசன் இப்பாடலில் நுட்பமாகச் சித்திரிக்கிறார். கலாப மயிலின் நீண்ட கழுத்தைப் பார்த்ததும் பாரதிதாசனுடைய கற்பனை சிறகடித்துப் பறக்கிறது. அம்மயிலை அருகழைத்து, "நீயும் பெண்களும் நிகர் என்று சொல்கிறார்கள். உண்மை தான். என்றாலும் அவர்களுடைய கழுத்து உன்னுடைய கழுத்துக்கு ஒப்பாகுமா? இயற்கை அன்னை உனக்கு அழகிய நீண்ட கழுத்தையும், பெண்களுக்குக் குட்டைக் கழுத்தையும் ஏன் கொடுத்தாள்?” என்று கேட்கிறார். மயில் பேசாமல் நிற்கிறது. கவிஞரே அதற்கு விடையும் கூறுகிறார் : அயலான் வீட்டில் அறையில் நடப்பதை எட்டிப் பார்க்கா திருப்ப தற்கே இயற்கை அன்னை, இப்பெண்களுக் கெல்லாம் குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்! உனக்கோ கறையொன்றில்லாக் கலாப மயிலே! நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தாள் என்று கூறுகிறார். அடுத்தவர் நடப்பில் விரும்பி மூக்கை நீட்டும் பழக்கம், பெண்ணினத்தின் மீது படிந்துள்ள கறையாகக் கவிஞர் நினைத்தார் போலும் என்றாலும் பெண்கள் என்ன கூறுவார்களோ என்ற அச்சம் அவருக்கில்லாமல் இல்லை. மயிலை அருகில் அழைத்து 'தான் சொன்னதைப்