பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ காஷ்மீரின் பாதுகாப்பை முன்னிட்டு இந்தியப் படைபலத்தைப் பெருக்கும் நோக்கில் நம் நாட்டு வருவாயில் பெரும் பகுதியை இராணுவச் செலவுக்கு ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த வெள்ளை யானை நம்நாட்டு நிதியில் டிெரும் பகுதியைத் தின்று ஏப்பமிட்டு நம்மை உலக அரங்கில் கடனாளியாக நிறுத்தி அவமானப்படுத்துகிறது. ஆட்சிப் பீடத்தில் அமரும் இந்திய அரசியல், வாதிகளும் சரி, பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் சரி, மக்கள் கவனத்தைத் திசைதிருப்பும் உணர்ச்சிமிக்க கருவியாகக் காஷ்மீர்ப் பிரச்சனையை வைத்துக் கொண்டிருக்கிறார்களேதவிர, அதை நன்முறையில் தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நெருங்குவதில்லை. சில நேரங்களில் இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளும் நாடகங்கள் கோமாளித்தனமாக இருக்கின்றன. பாகிஸ்தானுக்கோ, எரிந்து கொண்டிருக்கும் இப்பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வதைவிட இதை எரியவிட்டுக் கொண்டிருப்பதிலேயே அதிக ஆர்வம் உள்ளது. உண்மையான தீர்வில் அவர்களுக்கு ஆர்வமிருந்தால், சமாதானப் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே எல்லையில் பீரங்கித்தாக்குதல் நடத்த மாட்டார்கள்; வெளிநாட்டுத் தீவிர வாதக் கூலிப்படையை எல்லை தாண்டி அனுப்பமாட்டார்கள். பாகிஸ்தானை இரண்டு துண்டுகளாக உடைத்துக் கிழக்கில் ஒரு பங்களாதேஷ் உருவாகக் காரணமாக இருந்த இந்திரா காந்தியின் செயல், பாகிஸ்தானியர் உள்ளத்தில் அழிக்க முடியா ஆழமான வடுவாக மாறியுள்ளது. அதற்குப் பழிவாங்கத் துடிக்கும் பாகிஸ்தான், காஷ்மீரை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.