பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 3 தான் கலியான குணங்கள் நிறைந்தவர்கள் ஆவார்கள். ஸ்திரீகளுடைய வெளியழகின் கவர்ச்சி பழகப் பழகக் குறைந்து போகும். புருஷர் முதலில் வெளி அழகினால் கவரப்படுகிறார் கள். ஆனாலும், அவருடைய பிரேமை நீடித்து நிற்பதற்கு ஸ்திரீகளிடம் மற்ற சகலமான கலியான குணங்களும் இருப்பது அத்தியாவசியம். முதலில் அழகின் கவர்ச்சியினால் ஏற்பட்ட பிரேமையை, மற்ற உத்தம லக்ஷணங்களின் கவர்ச்சிதான் வளர்த்து நிலை நிறுத்திக்கொண்டு போக வேண்டும். அப்படி இல்லாமல், வெறும் அழகு மாத்திரம் இருந்து, அறிவும் குணங்களும் சூன்யமாக இருந்தால், அப்படிப்பட்ட ஸ்திரீகளும், உயிரற்ற சித்திரப் பதுமைகளும் ஒன்றுதான். அவர்களிடம் சில நாட்கள் பழகும் முன்னர் வெறுப்பும் பற்றின்மையும் ஏற்பட்டுவிடும். அதுபோலவே தான், நான் இதுவரையில் தேடிப்பிடித்த ஸ்திரீகள் எல்லாம் இருந்தார்கள். ஆகையால், எனக்கு அவர்களிடத்தில் நீடித்த பிரேமையும் வேரூன்றிய காதலும் ஏற்படவில்லை. உன்னிடத்தில் உடம் பின் அழகோடு, புத்தியின் அழகும், குணத்தின் விசேஷமும் பூர்த்தியாக நிறைந்திருக்கின்றன என்பதை நான் சந்தேகமறத் தெரிந்த கொண்டிருக்கிறேன். ஆகையால், நான் துணிந்து இப்பேர்ப்பட்ட பெரிய பிரஸ்தாபங்களை யெல்லாம் செய்தேன். உன்னை நம்பி நான் என்னுடைய உடல்,பொருள் , ஆவியாகிய சகலத்தையும் உன்னிடம் ஒப்புக் கொடுக்கலாம் என்ற ஒர் எண்ணம் உன்னைப் பார்க்கும் பொழுதே என் மனசில் தானாக உண்டாகிறது. இதில் எவ்விதக் கெடுதலும் ஏற்படாது என்ற ஒரு நிச்சயமும் என் மனசில் உண்டாகியிருக்கிறது. ஆகையால், என்னுடைய வாக்குறுதி பொய்க்கும் என்றாவது, அல்லது, மற்றவர்களை நான் புறக்கணித்ததுபோல சொற்ப காலத்தில் உன்னை யும் புறக்கணித்துவிட்டு இனி வேறொருத்தியை நாடுவேன் என் றாவது நீ கொஞ்சமும் சந்தேகப்படவே வேண்டாம்' என்று நிரம்பவும் உருக்கமாகக் கூறியவண்ணம் மெதுவாகத்