பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

யைக் கூறவேண்டியதில்லை. நாள் முழுவதும் தீநாற்றம் வீசும் தோலொடு தோலாய் அவர்கள் கிடப்பர். அவர்கள் உடலும், ஆடையும் அழுக்கடைந்து அருவருப்பாகக் காட்சியளிக்கும்.

மேலே விவரிக்கப்பட்ட காட்சிகளை நாம் உள்ளத்தால் காணும்போது, சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்த பாரோ மன்னர்களின் ஆட்சியில் ஏழை மக்கள் எவ்வளவு துன்பப்பட்டார்கள் என்பதையும், அரச குடும்பத்தாரும், செல்வர்களும் உல்லாசமாக வாழ்வதற்கு ஏழைமக்கள் எத்தகைய கொடுந்துயர்பட்டு மடிந்தார்கள் என்பதையும் அறியலாம். ‘ஒரு மனிதனுக்கு முதுகைப் படைத்திருப்பது அடிக்கும் தடிக்குக் குனிந்து கொடுப்பதற்குத்தான்’ என்பது பண்டை எகிப்து நாட்டுப் பழமொழி.

ஆம்! இக்கூற்று உண்மையே! இல்லாவிட்டால் மாபெரும் பிரமிடுகள் உருவாகியிருக்க முடியுமா? மாபெரும் கோவில்களும், சிற்பத் தூண்களும், விண்முட்டும் சிலைகளும் உருப்பெற்றிருக்க முடியுமா ? பல நூறு கி. மீட்டர் நீளமுள்ள கால்வாய்கள் வெட்டப்பட்டு நைல் ஆற்றின் நீரை அவற்றில் திருப்பி விட்டிருக்க முடியுமா ? மத்தியக் கிழக்கு நாடுகளை வென்று பாரோ மன்னர்கள் வெற்றிக்கொடி நாட்டியிருக்க முடியுமா ? இவ்வேழை மக்கள் இவ்வாறு தங்கள் குருதியைச் சிந்தியிராவிட்டால் ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் நாம் பிரமிடுகளைக் கண்டு வியப்படைய மாட்டோம்! பாரோ மன்னர்களின் பழம் பெருமைகளைப் பற்றிப் பாராட்டிப் பேசமாட்டோம்!