பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில் 46 குச் சட்ட திட்டங்களை வகுக்கவும் விரும்பிய பாரதி தாசன் அண்ணுவின் கருத்தையறிந்துவர என்னை அனுப்பினர். நான் அண்ணுவை அணுகிப் பாரதிதாசன் கருத்தைச் சொன்னேன். தமிழ் வளர்ச்சிக் குழுமக் கூட்டத்துக்கு அண்ணு வரமறுத்து விட்டார். நாவலர் நெடுஞ்செழியனையும்போக வேண்டாம் என்று கூறித் தடுத்து விட்டார். அண்ணுவின் விருப்பமின்மையை நான் பாரதிதாசனி டம் வந்து சொன்னேன். 'நமக்குத் தி.க.வும் வேண்டாம் தி.மு.க.வும் வேண்டாம். தமிழர்க்கென்று தனிக்கழகம் ஒன்று அமைப்போம்; நீ வந்து விடு' என்று சொன்னுர். "நீங்கள் அமைக்க விரும்பும் தனித் தமிழ்க் கழகத் துக்கு என் ஒத்துழைப்பு (Moral Support) என்றும் உண்டு;ஆளுல் நான் அதில் அங்கம் வகிக்கமாட்டேன். தமிழ்,தமிழ்ப் பண்பாடு ஆகிய உயரிய கொள்கைகளைப் பரப்புவோம்; ஆளுல் தி.க.வையோ, தி.மு.க.வையோ திட்டக்கூடாது' என்று நாள் சொன்னேன். தமிழ்த் தேசியக் கட்சியைச் சம்பத் துவக்கிய போதும் நான் இக் கருத்தைத்தான் வற்புறுத்தினேன். அவர்கள் அதன்ப்டி நட்க்கத் தவறியதும் நான் அதிலிருந்து வெளியேறிவிட்டேன். பாரதிதாசன் என் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, தி.மு.க.வின் மேல் இருந்த வெறுப்பின் காரணமாக அவர் பேராயக் கட்சிக்குக் (Congress) கூடச் சென்று விட்டதாகக் கேள்விப்பட்டேன். பேராயக் கட்சிக் கார ராகத் தேர்தல் மேடைகளில் பேசிப் பேராயக் கட்சிக் காரராகவே இறந்தார் என்றும் கேள்விப்பட்டேன். அவர் இறந்தபோது, கதர்க்கொடியால் மூடித்தான் அவர் பிணத்தை எடுத்ததாகக் கூறினர்கள். எந்த அளவு உண்மை அது என்று எனக்குத் தெரியாது. புலவர் குழு: முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்க ளால் முன்னின்று நடத்தப்பட்ட புலவர் குழுவில், முற். போக்குப் புலவர்களும், பிற்வோக்குப் புலவர்களும் சரிசமமாக இருந்தார்கள். இரண்டு குழுவினர்க்கும்