பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்|70 "வார்த்தைகள் அவரிடம் கைகட்டி நிற்கும்’ என்று வ. ரா. சொல்லுவார். உணர்வும் அப்படித்தான். சில கவிஞர்களுக்கு உணர்ச்சி தள்ளுவண்டி போன்றது. பீடி, சிகரெட், சாராயம், கஞ்சா ஆகியவற்றைப் போட் டால் தான் அவர்கள் கவிதை வண்டி நகரும். சிலர் சூழ்நிலையைத் தயாரித்து எப்போதும் தங்களை அதில் வைத்துக் கொண்டிருந்தனர். தாகூரும், மேலை நாட்டுக் கவிஞர் சிலரும் அப்படித்தான். ஆளுல் பாரதி தாசன் முற்றிலும் மாறுபட்டவர். அவர் எப்போதும் தெளிந்த உணர்வு நிலையிலேயே இருப்பார். இன்னும் அவருடைய சொற்களால் சொன்னல் நடைப்பிணங் கள் மத்தியிலே, வறுமையென்னும் தொல்லையிலே’ அவர் தமது உணர்வை மங்கவிட்டதில்லை; கற்பனை யைத் தேடி அலைந்ததில்லை. காலைப் பத்திரிகை வந்தது. குவட்டாவில் பூகம்பம்’ என்ற முழுத்தலைப்பு முன்பக்கத்தை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. சென்னை ஆரிய சமாஜத் தலைவர் பண்டிட் ஞானி என்பவர் பூகம்பத்தால் இறந்து போளுர் என்ற செய்தியும் வெளியாகியிருந்தது. இந்த ஞானி இருக்கானே ரொம்ப நல்லவன்' எனக்கு ரொம்பவேண் டியவன்' என்ருர் பாவேந்தர். "இந்த மாதம் கவிதா மண்டலத்துக்குக் குவட்டா பூகம்பமே தலையங்கமாக இருக்கலாம்' என்று கூறி னேன் நான். காலை ஏழு மணிக்கு பத்திரிகை அலுவலகத்திலேயே உட்கார்ந்து எழுதினர். அவர் எழுதத் தொடங்கில்ை அடித்தல் திருத்தல் ஒன்றும் இருக்காது. முடித்த கவி தையை இந்தா என்று மெதுவாகத் தூக்கி எறிவார்; பிறகு அதைப் பார்க்க மாட்டார். அந்தக் குவட்டா கவிதையில் ஓர் உவமை-"பானை வெடிக்கையிலே பருக்கை தப்புவதுண்ட்ோ? . உலகக் கவிஞர்களுள் எவரும் கையாளாத உவமை இது. அவ ருக்கே சொந்தமான, இரவல் வாங்காத, தழுவல் இல் லாத கற்பனை!