பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20


யாது. அந்நந்தியின் பெருமிதமான தோற்றமும், காதுகளின் நெரிப்பும், முகப்பின் சரிவும், முதுகின் பரப்பும், வயிற்றின் வடிப்பும், கால்களின் மடிப்பும் குளம்புகளின் பிளப்பும் சிற்பியின் கைவண்ணத்தைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

இந்நந்தியைப் பற்றி ஒரு கதை வழங்குகிறது. இந்நந்தி இராக் காலங்களில் வெளியில் சென்று பயிர்களை அழித்து வந்ததாம். இதனால் சினம் கொண்ட தஞ்சைப் பெருவுடையார், இதைக் கல்லாகுமாறு சபித்தாராம். இந்நந்தியின் அடியில் ஒரு தேரை இருந்ததாம். ஆண்டவன் சாபத்திற்குள்ளாகாத அத்தேரை நாள்தோறும் வளர்ந்ததாம். தேரை வளர வளர நந்தியும் வளர் தொடங்கியது. இப்படியே விட்டு விட்டால் நந்தியின் வளர்ச்சி அளவற்றதாகி விடும் என்று உணர்ந்து, அதன் முதுகில் ஓர் இருப்பாணியை அடித்தார்களாம். அதன் பிறகு நந்தி வளருவதில்லையாம். நந்திக்கு முன்னால் இறைவன் கோவில் விமானமும், பக்கத்தில் பெரிய நாயகி கோவிலும் இருக்கின்றன.

கோவிலைக் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், ஆடல் அரங்கம், இசை அரங்கம் எனப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். இக்கோவிலுக்கும் 'கேரளாந்தகன் வாயில்', 'இராசராசன் திருவாயில்' 'அணுக்கன் திருவாயில்' எனப் பல வாயில்கள் உள்ளன. கருவறையைச் சூழத் 'திருச்சுற்று மண்டபம்' உள்ளது. துவாரபாலகர் வடிவங்களை வாயிலின் இருபுறமும் அமைத்துள்ளார்கள். பெருவுடை-