பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

வெடிப்பை உண்டாக்குகிறது. இக் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இருப்புக் கப்புகள் துருப்பிடிப்பதாலும் கற்களில் வெடிப்புகள் ஏற்படுகின்றன. வெடித்த இச் சலவைக் கற்களை அகற்றி விட்டுக் குற்றமற்ற தூய பளிங்குக் கற்களை அவ்விடத்தில் பொருத்திப் பழுது பார்க்கின்றனர். கற்களைப் பொருத்துவதற்காகப் புதுவிதச் சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்துகின்றனர். சலவைக் கல்லைத் தூளாக்கி எரித்து, அந்த எரிபொருளைக் கொண்டு இச்சாந்து செய்கின்றனர். இச் சாந்தில் போதிய அளவு இளக்கம் ஏற்படுவதற்காக ரூமிமஸ்தகி என்ற ஒருவகைக் கோந்தையும், பதாசா என்ற வெல்லப் பாகையும், பேல்கரி என்ற ஒரு வகைக் கொடியின் சோற்றையும் கலக்கின்றனர். கட்டடக் கலை பற்றிய இந் நுணுக்கம் பண்டைய நூல்களில் விவரமாகக் கூறப்பட்டிருக்கிறது. இம் முறையைப் பயன்படுத்துவதனால் கட்டட அமைப்பிற்குள் எந்த விதமான மாசுமறுவோ, கேடு தரும் பொருளோ புகுந்து கட்டடத்தைச் சீர்குலைத்து விடாமல் காக்க முடிகிறது.

கி. பி. 1874 இல் தாஜ்மகாலின் விமானத் (dome)திலும், அதைத் தாங்கும் கழுத்தி (drum) லும் பல கற்கள் வெடித்துப் பழுது நேர்ந்தது. விமானத்தின் அமைப்புச் சீர்குலைந்து விட்டதோ என்று கட்டடக் கலைஞர்கள் ஐயுற்றனர். விமானத்தின் மேற்புறத்தில் பதிக்கப் பெற்றிருந்த சில பளிங்குக் கற்களில் வெடிப்பு ஏற்பட்டது. அவ் வெடிப்புகள் வழியாக மழைநீர் உள்ளே இறங்கி