பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் շ7 மறுபடியும் திரும்பி வருவாரோ என்றும், அல்லது, தனது மனதைச் சோதிப்பதற்காக அவர் ஒருகால் அவ்விடத்திலேயே எங்கேயாகிலும் மறைந்து கொண்டிருப்பாரோ என்றும் பலவாறு எண்ணமிட்டவளாய், அந்த அன்னநடைப் பூங்கோதை அந்த ஹால் முழுதும் சென்று பூத்தொட்டிகள் முதலியவற்றின் மறைவுகளையும் நாற்காலிகள் ஸோபாக்கள் முதலியவற்றின் அடிவெளிகளையும் கவனித்துப் பார்த்தாள். எந்த இடத்திலும் இளவரசராவது வேறே ஒருவராவது காணப்படவில்லை. அவள் மிகுந்த ஆச்சரியமடைந்தவளாய், தான் அவ்விடத்தில் சிறிது நேரம் காத்திருந்தால், எப்படியும் அதன் ரகசியம் வெளியாகிவிடும் என்றும், எவராகிலும் மனிதர் வந்தே தீருவர் என்றும் உறுதிப்படுத்திக்கொண்டு சமீபத்தில் இருந்த ஒரு ஸோபாவின் மீதமர்ந்து, நாற்புறங்களிலும் நிறைந்து அவளது பஞ்சேந்திரியங்களையும் மயக்கி வசீகரித்த புதுமைகளில் தனது திருஷ்டியையும் கவனத்தையும் செலுத்தியவளாக உட்கார்ந்தி ருந்தாள். அவ்வாறு கால் நாழிகை, அரைநாழிகை, ஒருநாழிகை நேரமும் கழிந்தது. அவ்விடத்தில் மனிதரே வரவில்லை. அவளது மனம் கரை கடந்த சஞ்சலம் அடைந்தது. திரேகம் துடிதுடிக்க வாரம்பித்தது. அவளுக்கு இளவரசரின் மீது மிகுந்த கோபம் உண்டாயிற்று. தன்னிடத்தில் வந்து எவ்வளவோ பணிவாகவும், நயமாகவும் உருக்கமாகவும் பலபல பேசி வாய்ப்பந்தல் போட்டு, தன்னை அபாரமான செல்வத்திலும் உன்னத பதவியிலும் வைத்துத் தன்னைவிட்டு ஒரு நொடியும் பிரியாதிருப்பதாக வாக்களித்துத் தன்னை அங்கே வரச்செய்த இளவரசர், தன்னை அவ்வாறு காக்கவைத்து வேதனைக்கு ஆளாக்கி அவமானப்படுத்தும் படி ஆனதா என்ற ஒருவித மனக்கொதிப்பும் உண்டாயிற்று. தான் அதற்கு மேலும், அவ்விடத்தில் இருப்பதா, அல்லது அவ்விடத்தை விட்டு வெளிப்பட்டுத் தனது ஜாகைக்குப் போவதா என்று அவள் யோசிக்கலானாள். எல்லாவற்றிற்கும் தான் எழுந்து வாசற் கதவண்டை போய், அதைத் திறந்துகொண்டு வெளியில்