பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i () பூர்ணசந்திரோதயம்-2 களுக்கு, ராஜா, மகாராஜா என்ற கெளரவப் பட்டங்கள் கொடுத்து கண்ணியப்படுத்துகிறார்கள். நம்முடைய ராஜ்யத்தில் மாத்திரம் அந்த வழக்கம் இல்லை. அது சம்பந்தமாக எனக்கு ஒரு நினைவு உண்டாயிற்று. இந்த ராஜ்யத்திலுள்ள ஜெமீந்தார்களுள் நீங்கள் வயசிலும், செல்வத்திலும், செல்வாக்கிலும் மேலான வர்கள்; என்னிடத்தில் நீங்கள் பரம விசவாசம் உள்ளவர்கள்; நீங்களும் நானும் பழகிவரும் இத்தனைவருஷ காலமாக எனக்கு நீங்கள் ஆயிரக்கணக்கான உதவிகள் செய்திருக்கிறீர்கள்; எல்லா விஷயங்களையும் கருதி என்னுடைய நன்றியறிதலைக் காட்டுவதற்கு நான் ஏதாவது பெரிய மரியாதையாக ஒன்று உங்களுக்குச் செய்ய வேண்டுமென்று நிரம்ப காலமாக நினைத்து வந்தேன். பண விஷயத்தில் நான் உங்களுக்குச் செய்யத்தக்கது ஒன்றுமில்லை. உங்களிடம் ஏராளமான செல்வம் இருப்பதால் அதைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லை. ஆகையால், உங்களுக்கு மகாராஜா என்ற கெளரவப் பட்டம் கொடுக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் கால்நாழிகைக்கு முன்புதான் திடீரென்று என் மனசில் உண்டாயிற்று. ஆனால் அந்த விஷயத்தில் உங்களுக்குப் பிரியம் இருக்குமோ . என்னவோ?’ என்று தேன் ஒழுகுவது போல நயமாக மொழிந்தார். அதைக்கேட்ட கிழவர், மட்டுக்கடங்கா ஆனந்தங்கொண்டு தமது ஆசனத்திலிருந்து துள்ளிக்குதித்து நன்றியறிதலும் உருக்கமும் நிறைந்த வதனத்தினராய் இளவரசரது கரத்தை அன்பாகப் பிடித்து, "ஆகா மகாராஜா என் விஷயத்தில் தங்களுக்கு இருக்கும் அபிமானத்துக்கும் அன்புக்கும் நான் என்ன கைம் மாறு செய்யப்போகிறேன். இந்த உலகத்தில் பணத்தால் அடையக்கூடிய சகலமான இன்பங்களையும் பெருமைகளையும் நான்அனுபவித்தாகி விட்டது. இருந்தாலும் என் மனசில் இந்த ஒரே குறைதான் இருந்து வந்தது. நான் இறப்பதற்குள் ஒரு நாளாவது மகாராஜா என்ற பட்டப்பெயரை