பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதற்பெருந்தமிழர்

  கண்டார். அந்நாளில் மாநிலக் கல்லுரரியின் மதிப்பிற்குரிய தலைவராய் விளங்கிய தாக்ளின் திரு. முதலியாரின் புலமையை வியந்து தேர்வில் வெற்றி பெற்றதுமே அவருக்கு மாநிலக் கல்லூரியில் ஆங்கிலத் துணைப் பேராசிரியர் வேலையை அக மகிழ்ந்து அளித்தார். ஆனால் கல்வியைப்போலக் கருனை உணர்வும் மிக்கவராயிருந்த திரு. முதலியார் தமக்கு வந்த பதவியைத் தமக்கு அடுத்த நிலையில் தேர்வு பெற்ற ஒருவர் வாழ்க்கை வளம் பெறும்பொருட்டு வழங்கிவிட்டு, மேற்படிப்பில் ஈடுபட்டார்; வரலாற்றையும் தத்துவத்தையும் பாடங்களாக எடுத்து, கலை முதல்வர் தேர்வு எழுதி 1873ல் அப்பட்டத்தைப் பெற்றார் 1875-ஆம் ஆண்டில் மாநிலத்திலேயே முதல்வராகச் சட்டக் கல்விப் பட்ட மாகிய சட்டக் கலை இளைஞர் தேர்வில் முதல்வராய்த் தேர்ச்சி பெற்றார் இத்தகைய ஈடுஇனையில்லா கல்வி மேம்பாட்டைத் திரு. முதலியார் பெற்றிருப்பதை நீதிபதி ஹாலோவே' என்பவர் அறிந்து, திரு. முதலியார் அவர்கட்கு வழக்கறிஞர் பயிற்சி தரும் படி ஒ ஸல்லிவன் என்பவரை வேண்டினர். திரு. முதலியார் வழக்கறிஞர் பயிற்சி பெற்று, 1876ல் தம்மை ஒர் உயர்நீதி மன்ற வழக்கறிஞராய்ப் பதிவு செய்து கொண்டு சேலத்தில் தொழில் புரியத்தொடங்கினார்

வழக்கறிஞர் தொழிலில் கட்சிக்காரர்களும் பொதுமக்களும் நீதிபதிகளும் போற்றும் திறனையயும் புகழையும் பெற்றார் திரு. முதலியார். ஆயினும், இவர் மனம் நீதி வழங்கும் அதிகாரத்திலையே பெற்று நாட்டுக்கு நன்மை புரிய விரும்பியது. அதனால் இவர் விருப்பத்தையும், விண்ணப்பத்தையும் அந்நாளில் மாவட்ட நீதிபதியாயிருந்தவர் ஆதரித்து,