பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 இரு பெருந்தலைவர் கடிதம் ஒரு சுதேசி மற்றொரு சுதேசிக்கு எழுதியது. இக்கடிதத்தில் லட்சுமி நரசிம்முலுவைப்பற்றி மிக உயர்வாக எழுதப்பட்டுள்ளது. இந்த நாட்டின் ஆட்சி முறைகளிலுள்ள ஒவ்வொரு குற்றம் குறையையும் அரசாங்கத்தினர் ஆராய்ச்சி செய்யும்படி செய்தவர் லட்சுமி நரசிம்முலு என்ற அரிய உண் மையை இக்கடிதத்தை எழுதியவர் குறிப்பிட்டுள்ளார். எவ்விதமான ஐயத்துக்கும் இடம் தாராமல் உண்மை அன்புடன் எழுதப்பட்ட இக்கடிதம்: நாட்டு மக்கள் எவ்வளவு உயர்வாக லட்சுமி நரசிம்முலுவை மதிக்கிறார்கள் என்பதற்கு ஒரு சிறந்த சான்றாகும். இக்கடிதம் முழுவதையும் வாசிக்க எனக்கு நேரமில்லை. ஆனால் லட்சுமி நரசிம்முலு ஊக்கம் நிறைந்த ஒழுக்கம் வாய்ந்த சிறந்த சீர் திருத்தவாதி என்றும், தம் கொள்கைகளைச் செயற் படுத்தக் தம் சொந்தப் பணத்தை வாரி இரைத்த வண்மையாளர் என்றும் கூறி அமைகின்றேன். திரு. ஹார்வியை ஆசிரியராகக் கொண்டு அவர் நிறு விய இளம்பிறை பல்லாண்டு காலம் நாட்டு மக்களின் நன்மைக்காகப் போராடியது. இந்த முயற்சி யில் திரு. லட்சுமி நரசிம்முலு தம் செல்வத்தில் பெரும்பகுதியை இழந்தார். 1852-ஆம் ஆண்டில் அவர் வரைந்தனுப்பிய விண்ணப்பத்தை ஆட்சியாளர் முதலில் முணுமுணுப்போடு பார்த்தார்க ளென்றாலும், பிற்காலத்தில் வரிக் கொடுமை பற்றியும் அக்கொடுமைக்கு இசையான உழவர்களுக்கு விதிக்கப்பட்ட கடுந்தண்டனைகளைப் பற்றியும் ஆராய அமைக்கப்பெற்ற பல்வேறு குழுக்களுக்கும் அதுவே அடிப்படை. பிற்காலத்தில் அரசாங்கம் அவரைப் பெரிதும் பேர்ற்றி மதித்த செயல், ஆரம்ப