பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"சித்தர்கள் உடல் வருத்தி வாடி உயர்தெறி சேர்வர்; ஒளி ஒன்று தோன்றி மறையும். உலகத் துன்பம் பெரி தாய்த் தோன்றும்; ஒளியைப் பிரிந்த நிலை மிகமிக வாட் டும், சித்தர்களது நினைவு வலுப் பெறப் பேரின் பப் பேரொளி விட்டு விட்டன் றி முற்ற முடியத் தொடர்ந்து தோன்றும். அப்பேரின் பத்தின் முடிவாக ஆழ்ந்து ஒன்றி விடுவர். சித்தர்கள், வாசி என்ற மூச்சினை அடக்கி ஆண்டு, யோக சக்தியினுல் உடலில் உள்ள மூல ஆதாரம், கொப் புழ், இதயம், இரைப்பையின் நடு, கழுத்து. தலைமுடி என்ற ஆறு இடங்களிலும் மனத்தை முறையாக நாட்டிக் குண்டலியை எழுப்பிப் பலபல அனுபவமும் வெற்றியும் கண்டு, அப்பால் உள்ள எல்லாம் ஆன பொருளில் நிலைத் துச் சித்தி பெறுகின்றனர்" (சித்தர் பாடல்கள்-அரு. இராமதைன்). தமிழ்ச் சித்தர்கள் பதினெட்டு பேர்களின் முழுமை யான, உண்மையான வரலாறு நமக்குத் தெரியாது. அவர்களின் பாடல்கள் மட்டும் கிடைத்துள் ளன. அவர் கள் வாழ்ந்த கால கட்டத்தில் உள்ளவர்களுக்கு, அம் மகான்களின் வாழ்வை எழுதி வைக்க வேண்டும் என்ற சிந்தனையும் இருக்கவில்லை. சித்தர் பாடல்களில் பல நமக்குப் புரியாமலிருப்பதன் காரணம் அதுதான். மாங்காய் பால் உண்டு மல்ே மேல் இருப்பார்க்கு தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய் தேங்காய்ப் பால் ஏதுக்கடி, வேகம் அடக்கி விளங்கு மெய் ஞானிக்கு யோகம் தான் ஏதுக்கடி - குதம்பாய் யோகம் தான் எதுக்கடி. நித் திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு முத்திரை ஏதுக்கடி - குதம்பாய் முத் திரை ஏதுக்கடி.