பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

வையும் பார்த்த கலைவல்லார் மாமல்லபுரத்திற்கு வந்ததும் ‘ஆ’ என்று வாயைத் திறந்து அப்படியே அதிசயித்து நின்று விடுகிறார்கள். மலைகளைச் செதுக்கி உருவாக்கிய பஞ்சபாண்டவ ரதங்களையும், குகைச் சிற்பங்களையும் கண்டு தமிழ்நாட்டிலே ஒரு எல்லோராவை - ஆம், எல்லோராவில் உள்ள பல குகைகள் வெட்டிச் செதுக்குவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே மாமல்லபுரத்தில் நிறுவிய மாமல்லனை வாயாரப் புகழ்கிறார்கள். எல்லோராவிலும், எலிபெண்டாவிலும் காணும் சிற்ப உருவங்களைவிட எவ்வளவோ சிறந்த சிற்ப ஓவியங்கள் அல்லவா இந்தத் தமிழ்நாட்டுச் சிற்பிகளின் சிற்றுளிகளால் செதுக்கப்பட்டிருக்கின்றன, பகீரதன் தவக் காட்சி ஒன்றையே பார்த்துக் கொண்டு நிற்கலாம் பல மணி நேரம். மகிஷாசுரமர்த்தினி, அனந்தசயனன், வராகமூர்த்தி, திருவிக்கிரமன் முதலிய சிலை உருவங்களில் காணும் கற்பனை வளம் எல்லோராவைத் தூக்கியடிக்கிறது. சிற்ப உருவங்களை வேறிடத்தில் செதுக்கி அவைகளை எடுத்து வந்து மற்றோரிடத்தில்:ஒட்ட வைத்தது போல எல்லோராவிலும், எலிபெண்டாவிலும் இருக்கும். ஆனால், மாமல்லபுரத்திலோ உருவங்கள் கல் சுவர்களின் உள்ளிருந்து துடித்துக் கொண்டு வெளியே குதிப்பது போல் இருக்கும். இப்படியெல்லாம் நான் சொல்லவில்லை, சிற்பக்கலை ஆராய்ச்சியில் வல்லுநரான கார்ல் கந்தீலாலே சொல்கிறார். பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் வளர்ந்து வந்த சிற்பக் கலை மாமல்லபுரத்தில்தான் பூரணப் பொலிவுடன் உச்சநிலையை எய்துகிறது என்றும் அவரே கூறுகிறார். ஆயிரக்கணக்கான மைல்கள்

87