பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

பொய் சொல்லா அரிச்சந்திரன் பரம்பரையில் வந்தவர்கள் அவர்கள் என்று அப்படிப் ‘பொய் சொல்லார்’ என்ற பட்டமே நாளடைவில் ஹொய்சலர் என்று மாறிற்று என்று சொல்லியிருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். சரி. இந்தப் பெயர் ஆராய்ச்சி இத்துடன் இருக்கட்டும். இனி நாம் அவர்கள் கட்டிய கலைக் கோயில்களைச் சுற்றிப் பார்க்க விரைவோம்.

ஹலபேடில் உள்ள ஹொய்சலேஸ்வரர் கோயில். பேலூரில் உள்ள சென்னகேசவர் கோயில், சோமநாதபுரத்துக் கேசவர் கோயில் மூன்றும், ஹொய்சலர் கோயில் கட்டிடக் கலைக்கும், சிற்பச் செல்வத்துக்கும் எடுத்துக்காட்டாக அமைபவை. இக்கோயில்களைக் கட்ட உதவியிருக்கும் கற்கள், நமது தமிழகத்துக் கருங்கல்லைப் போல கடினமானவை அல்ல, ஆனால், மாக்கல்லைப் போலப் பொடிந்து போகக் கூடியதும் அன்று. அக்கற்களை வெட்டி எடுக்கும் போது மெதுவாக இருந்திருக்கும். பின்னால் காற்றிலும் மழையிலும் அடிபட அடிபட இறுகி உறைந்து கடினமாகவும் ஆகியிருக்கிறது.

இம்மூன்று கோயில்களிலும் காலத்தால் முந்தியது ஹலபேடு ஹொய்சலேஸ்வரர் கோயிலே. ஹலபேடு தானே ஹொய்சல மன்னர்களின் தலைகரம்! அங்குதான் அம்மன்னர்கள் சமணர்களாக இருந்த காலத்தில் கட்டிய சமணக் கோயில்கள் பல இருக்கின்றன. என்றாலும் ஹொய்சலேஸ்வரர் கோயில் சிவபெருமானுக்கு என்று எடுப்பிக்கப்பட்ட கோயில். ஹலபேடு மைசூருக்கு வட மேற்கே 87 மைல் தூரத்தில் இருக்கிறது. கோயிலின் அமைப்பு நட்சத்திர வடிவில்

53