பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்டுடியோ அதிபர் "ஆமாம், சுவாமி ; கன்னி பகவதி யின் மூக்கில் அழகொளிரக் காட்சி அளிக்கும் ரத்தினத் தைக் கண்டேன்" என்ருர், சுவாமிகள் சிரித்துக் கொண்டே ‘இல்லையப்ப ! குமரிக் கடற்கரையில் கந்தல், உடுத்துக் கொண்டு அலை யும் அம்மாவைப் பார்த்தாயா ? " என்று கேட்டார். மாயம்மாவைப் பற்றி நான் அறிந்தது சுவாமிகள் வாயிலாகத் தான். 1964-ல் கன்னியாகுமரி குருகுலத்துக்கு ஞான ஆனந்த சுவாமிகள் வருகை தந்திருந்தார். அப்போது அவர் அம்மாவைப் பார்த்திருக்கலாம். சு வ ச மி அம்மாவைப் பற்றிச் சொன்ன அடுத்த வாரமே நான் கன்னியாகுமரிக்குச் சென்றேன். அம்மா வைக் கண்டு தொழுதேன். அதன் பிறகு ஆண்டு தோறும் சென்று கொண்டிருக்கிறேன் என்று கூறிஞர் திரு. இராஜமாணிக்கம். இப்போது அ ம் ம இருக்கும் ஓலே க் கு டி ல் திரு. இராஜமாணிக்கம் அவர்களின் பெரு முயற்சியால் தான் கட்டப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அம்மா பகல்தோத்தில் கடற்கரையிலேயே இருப்பார். இருட்டியதும் கோவிலின் கிழக்கு முகப்பில் உள்ள சிறு வாயிலின் முன் மண்டபத் தின் ஒட்டுத் திண்ணையில் படுத்துக் கொள்வார்; அல்லது கோவிலின் முன் முகப்புப் பகுதியில் படுத்துக் கொள்வார். மழைச் சமயமாய் இருந்தால் பகலில் கூட அம்மா வின் புகலிடம் அதுதான். ஒரு முறை கோவிலில் மராமத்து வேலை நடந்த போது, தேவசத்திற்கு உரிமையான இடத்தில் கூலி