பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்/148 பாத்து வா’ என்ருள். சரிங்க ஐயா" என்று கூறிச் சென்ருர் வந்தவர். நீண்ட நேரம் கழித்து அவர் திரும்பி வந்து, சுதும்பு மீன் இல்லைங்க ஐயா, வேறு மீன்விக்குதுங்க” என்ருர் அவர், "ஓகோ... சரி. நீ போ’ என்று சலிப்புடன் கூறினர் பாவேந்தர். பாவேந்தர் எதை விரும்புகிருரோ அஃது உடனே நிறைவேற வேண்டும். இல்லாவிட்டால் மிகுந்த சலிப்படைவார். அந்தச்சலிப்பு ஓகோ...சரி. நீபோ’ என்ற அவர் சொற்களில் நிரம்பி விழிந்தது, கவிஞர் அவர்கள்அடிக்கடி கூட்டங்களுக்காக வெளியூர் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது யாரேனும் ஒருவரை உடன் அழைத்துச் செல்லுவார். உடன் வருபவர்களிடம் தமக்குத் தேவையானவற்றை வாங்கி வரும்படி பணிப்ப்ார். தம்முடன் வருபவரின் கல்வித்தகுதி, செல்வநிலை ஆகியவற்றைப் பற்றிக் கவனிக்கம்ாட்டார். செல்லும் இடத்தில் தமக்குக் கிடைக்கும் மரியாதை தம்முடன் வந்தவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் அவர் கண்ணுங்கருத்து மாகஇருப்பார். அவரோடு ஒதுமுறை ஒரு திருமணத்துக்குச் சென்றிருந் தேன். திருமண்வீட்டில் உள்ளவர்களிடம் என்னைப் பற்றிப் பெருமையாகக் கூறி அறிமுகப் படுத்திர்ை. "இதோ...இவரு என்ைேட வந்தவரு...படிச்சவரு... பெரிய இடத்துப் பிள்ளை...எல்லாம் அவருதான்’ என்று திருமண வீட்டாரிடம் கூறியது என் உள்ளத்தை உருகச் செய்தது. கவிஞருக்குக் கிடைத்த ராஜமரியாதை’ எனக்கும் கிடைத்தது. கவிஞரின் பரந்த உள்ளத்தை எண்ணி எண்ணி நான் பெருமிதமடைந்தேன். புதுவையில் ஒரு பெரிய கோவில் உள்ளது. அந்தக்