பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயம்மாவின் நடை உடை பாவனைகள் எல்லாலே முன்பு சமாதியடைந்த பெண்ணின் சாயலாக உள்ளது. திரு சிவ கப்பிரமணிய பிள்ளை கூறும் இந்தச் செய்தி கள் உண்மையானவை தான். சுசீந்திரத்தைச் சார்ந்த ஒருவர், என்னிடம் அந்தப் பெண்ணின் தெய்வத் தன்மையைப்பற்றிக் கூறிய திகழ்ச்சி இது. சுசீந்திரம் கோவில் பக்கம் உள்ள தேரை அப்போது பரம்புத் தட்டியால் அடைத்து வைத்திருத்தார்கள். தேரின் மேல் பக்கம் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தது. கீழ்ப்பக்கம் திறந்த வெளியாய் இருந்தது. ஒரு நாள் இரவு சுமார் பத்து மணி இருக்கும். மின்சாரம் வராத காலம் அது. பெரிய தேரின் அடியி லிருந்து யாசோ உயிருக்குப் போராடுவது போன்ற குரல் கேட்டது. தேரின் எதிரே உள்ள சத்திரத்துத் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் குரல் வந்த திசைக்கு விரைந்து சென்றனர். தேரின் அடியில் சக்கரங்களின் இடையில் முப்பது வயதுடைய இளைஞன், மேல் மூச்சு வாங்க களைத்துப் போய் சாய்ந்து கிடந்தான். அவன் தானுமாலேயன் கோவிலில் வேலை செய்கின்றவன். அவன் கிடந்த இடத்திற்குக் கொஞ்சம் தள்ளி ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவளுக்கு வயது நாற்பது இருக்கும். நல்ல வாளிப்பான உடம்புடைய அவளது மேல் பகுதியில் ஆடையில்லை. அவள் அமைதியாக இருந்தாள். புதிய மனிதர்களைக் கண்டு அவள் மிசள வில்லை : அஞ்சவில்லை ; அவனைப் பற்றிக் குறை கூறவும் இல்லை ; வேறு எதுவும் இல்லை.