பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1011முருகுசுந்தரம் காவிரிக் கரையூராகிய மணப்பள்ளியில் சிவசுப்பிர மணியம் அவர்கட்குத் திருமணம் செய்து கொடுத்தார். பாவேந்தர் விரும்பியிருந்தால் தம் பெண்களுக்குப் புதுவையிலே மாப்பிள்ளை தேடியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் வேறுபட்ட கலை, பழக்க வழக்கங்கள் உள்ள தொலைவூர்களில் பெண்கொடுத்ததும், கருநாடக மாநி லத்தில் தம் ஒரே மகன் கோபதிக்குப் பெண்ணெடுத்த தும் அவர் புதிய உறவுகளை விரும்பி வரவேற்றவர் என்பது புலஞகும். பெண் எடுப்பதும், கொடுப்பதும் அருகில் இருக்கக் கூடாது என்பது அவர் கொள்கை. தம் பெண்களின் திருமணத்தைப் பற்றிய பேச்சு எழும் போதெல்லாம் இக்கொள்கையைப் பெருமிதத்தோடு பிரகடனப்படுத்துவார் பாவேந்தர். பாவேந்தரின் வாழ்க்கை தோண்டத் தோண்டக் குறை யாத புதையலைப் போன்றது; இறைக்க றைக்க ஊறும் ஊருணி போன்றது. அவரோடு பழகிய நாட் களில் என் நினைவில் நிலைத்த நிகழ்ச்சிகள்ை இங்கு விவரிக்க விரும்புகிறேன். †† எங்கள் குடும்பம் அப்போது ஓரளவு செல்வச் சூழ் நிலையில் இருந்தது. இருந்தாலும் என் தந்தையாரின் உடன் பிறந்தாருக்குள் இருந்த சில கருத்து வேற்றுமை களால் குழப்பமான சூழ்நிலையிலும் இருந்தது. நான்கு பக்கமும் கூடம் அமைந்தது எங்கள் வீடு, பாவேந்தர் ஏறுபோல் வீறுடன் நடந்து வந்து கூடத் தின் நடுவில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். எங் கள் குடும்பச் சூழ்நிலையை அவர் பொருட்படுத்தவில்லை. எங்கள் பொருளாதார வசதி, சொத்துவிபரம் ஆகியவை பற்றியும் கேட்கவில்லை. எங்கள் தந்தையின் பெருமித மான தோற்றமும். என் அண்ணுரின் தோற்றப் பொலி வும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டன. எங்கள் குடும் பம் பண்பட்ட குடும்பமா, இல்லையா என்பதில் மட்டுமே அவர் கருத்தைச் செலுத்தினர். "மாப்பிள்ளையை எனக் குப் பிடித்திருக்கிறது" என்று அவர் வெளிப்படையாகப் பசிய பாங்கு எங்கள் குடும்பத்தாரைப் பெரிதும் கவர்ந்தது. நான் சிறுவகை இருந்தாலும் மேல்பட்டாம் பாக்கத் தில் பெருமாள் கோவில் தெரு 177-ஆம் எண்ணுள்ள