பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலையிலும் குப்பைகளை ப் பொறுக்கும் வேலை தொடர் கிறது. முன் போலவே வட்டியுடன் சேகரித்துக் குவித்து எரிக்கிருர்கள், இப்படிக் குப்பைகளை ச் சேகரிப்பது எரிப்பது என்ப தற்கெல்லாம் இவ்வளவு என்ற கணக்கு இல்லை இது போலவே அம்மா காலையில் எழுந்திருப்பதற்கும் மாலையில் உறங்குவதற்கும் குறிப்பிட்ட நேரம் கிடையாது. காலையில் 6 மணிக்கும் எழுந்திருக்கலாம 7 மணிக்கும் எழுந்திருக்கலாம் இரவு உறங்கப் போவதும் அப்படிக் தான் 8 மணிக்கும் உறங்குவதுண்டு 12 மணி வரை விழித்திருப்பதும் உண்டு.



ஐ ந் து



பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அம்மாவைப் பற்றிக் கன்னியாகுமரியில் உள்ள மக்களிடம் கேட்டால் அவர் தெய்வத்தன்மை பொருந்திய ஆ ன் ம என்று: சொல்லமாட்டார்கள் ஆளுல் அவர் கைராசியுடையவர் என்ற மதிப்பு கன்னியாகுமரி கடைக்காரர்களிடம் உண்டு, அம்மாவைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்றை வெளியிட வேண்டும் என்று நான் சென்ற போது எனக்குக் கிடைத்த செய்திகளுள் இது சுவையானது. "அவள் ஒரு (Mental complex (மன வியா தி பிடித் தவர்) குளிரோ சூடோ பாதிக்காத அளவுக்கு வலுப் பெற்ற உடலையுடைய கிறுக்கு. கிறுக்குகளில் அது கிறுக்கு என்று யாரும் கண்டு பிடிக்க முடியாத வகை இது. அதனுல்தான் கடும் குளிரிலும் கடற்கரையில் இருக்கிருள்; நீரில் நீந்து கிருள்; அச்சமின்றி இறங்குகிருள்; பாறைகளுக்கிடையில் கையை விடுகிருள்; அவ்வளவுதான். மற்றபடி ஊருக்கு ஊர் பஸ் நிலையங்களில் கைராசிப் பிச்சைக்காரர்கள்