பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களுக்கு மாவிடித்துக் கொடுத்தும், மாவரைத்துக் கொடுத்தும், கிடைத்ததை உண்டு வயிறு கழித்து வந்தார். அப்போது அவர் பரதவர் குடியின் எல்லையைத் தாண்டி கோவில் பக்கமோ சந்நிதிக் கடைகள் பக்கமோ வந்தது கிடையாது. அந்தப் பெண் தான் இப்போது மாயம்மா வாக இருக்கிறார்.

மாயம்மாவைப் பற்றிக் கன்னியாகுமரி பரதவர் குடியில் இப்படிச் சிலர் கூறினார்கள். ஒரு முதியவர் "என் வீட்டில் அவள் மாவிடித் திருக்கிறாள்; கூலியாக கருவாட்டைக் கொடுத்திருக்கிறேன்" என்றார். சுவாமிநாதன் திருச்சியைச் சொந்த ஊராகக் கொண்டவர். தமிழ் நாட்டுச் சித்த புருஷர்களோடு தன் வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கிறார், அம்மாவோடு ஏழாண்டுகள் தொடர்பு. அவர் "அம்மா நேபாளத்தைச் சார்ந்தவர் சந்தேகமில்லை" என்றார்.

ஐந்தருவியில் உள்ள சங்கரானந்தா என்ற துறவி முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கன்னியாகுமரிக்கு வந்திருந்தராம். அம்மா இப்போது இருப்பது போன்ற நிலையில் இருந்ததை அவர் கண்டாராம்.

சுவாமி சிவானந்தா கன்னியாகுமரிக்கு வருகை தந்தபோது உள்ளூர் பக்தர்கள் மாயம்மாவைப் பற்றிக் கூறினார்களாம். சுவாமி அம்மாவைத் தேடிச் சென்று பார்த்து விட்டு, இது நிச்சயமாக ஜீவன் முக்தி தான்; சந்தேகமில்லை என்றாராம்.

கோவிந்தன் ஆசாரி என்பவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடுடையவர் அவர் அம்மாவைப் பற்றிக் கூறிய செய்தி புதுமையாக இருந்தது.

"நான் 54 ஆண்டுகளுக்கு முன் கன்னியாகுமரிக்கு என் தந்தையோடு சென்றிருந்தேன். அப்போது எனக்கு 12 வயது இருக்கும். சங்கிலித் துறையின் பக்கம் கூட்-