பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- || 4– பயம் காரணமாக, அவசர அவசரமாக அன்னையைத் தொழுது வலம் வந்துவிட்டு நாகர்கோயிலை நோக்கிப் பேருந்தில் பறந்தேன். மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடந்து மாதங்கள் ஆறு ஆகிவிட்டன. பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி கன்னியா குமரி இதழ் ஆசிரியரும் முப்பது ஆண்டுகட்கு மேற்பட்ட நண்பருமாகிய திரு. பி. எஸ். மணி அவர்களின் இளைய மகன் திருமணத்திற்காகச்செல்லும் கடமையுணர்வு எனக்கு தல்ல வேளையாக நல்வினை காரணமாக ஏற்பட்டது. அத் துடன் நெருக்கடிக் காலத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியால் (Stroke) பக்கவாத நோய்க்கு இரையாகி இன்னும்முழுநலம் பெருமல் இருக்கும் என் மனைவிக்கு நாகர்கோயிலில் உள்ள புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்தியர் ஒருவரிடம் மருந்து வாங்குவதற்காகவும் நாகர்கோயில் செல்லும் எண்ணம் எழுந்தது. அதன்படியே நாகர்கோவில் சென்ற யான் அங்குள்ள இளந் தலைமுறையின் இளஞாயிறு திரு. அ. காக்கும்பெருமாள் அவர்களையும் புகழ்பெற்ற எழுத்தா ளர் திரு. சுந்தர இராமசாமி அவர்களையும் சந்தித்துப் பல செய்திகளைத் தெரிந்து கொள்ள திட்டமிட்டேன். பிப்ரவரி ஆரும் தேதி திரு. சுந்தரராமசாமி அவர்கள் என்னையும் மனைவியையும் காலைச் சிற்றுண்டிக்கு அழைத் துச் சென்ருர்கள். அப்புறம் எங்கள் மீது வைத்தப் போன் பு காரணமாக நாங்கள் அதுவரைப் பார்க்காமல் இருந்த பத்மநாபபுரம் அரண்மனையைக் காட்டவும் இசைந்து காரில் அழைத்துச் சென் ருர்கள், வழியெல்லாம் இயற்கை அழகை-அமுதை-வாரி உண் டோம். இரத்தினச் சுருக்கமாக பெட்டகமாக அமைந்தி ருந்த பத்மநாபபுரம் அரண்மனையில் வாடா விளக்கையும் வண்ண வண்ண ஒவியங்களை யும், பத்மநாப சுவாமிகள் யோக நித் திரை அறிதுயில் புரிய கேரள மன்னர் அமைத்தி ருந்த கட்டிலையும் இரண்டாம் தட்டில் அவர் இன்துயில்