பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 325 தெரியாமல் நான் வேறே எங்கேயாவது போய் இவரைவிட அதிக அழகுள்ள மனிதரைப் பார்த்திருக்கிறேன் என்று நான் எப்படிச் சொல்லுகிறது? நீ சொன்னபடி இப்படிப்பட்ட சுந்தர ரூபனைப் போல வேறே மனிதரை நாம் பார்த்ததும் இல்லை; இனி எப்போதும் எவ்விடத்திலும் பார்க்கப் போவதும் இல்லை. அப்படி இருக்க இவரிடத்தில் யாருக்குத்தான் ஆசை உண்டாகாது? நேற்றைக்கு முந்திய தினம் காலையில் இவரைப் பார்த்த முதலே, என் மனம் சித்தப்பிரமை கொண்டதுபோல ஆகி அடியோடு பிரமித்துக் கலங்கிப் போய்விட்டது. என்னுடைய உடம்பு கட்டுக் கடங்காமல் தவித்துப் பறந்து கொண்டே இருந்தது. நேற்றைக்கு முந்திய நாள் பகல் பொழுது எப்போது தொலையும் தொலையும் என்று நான் ஜெபம் செய்து கொண்டே வந்தேன். இவரைப் பார்க்கப் பார்க்க, என் நெஞ்சம் அனலில் வெண்ணெய் போல அப்படியே உருகிக் கொண்டிருந்தது. உடம் பின் வேதனை சகிக்க அசாத்திய மானதாகிவிட்டது. அன்றையதினம் ராத்திரி வந்த பிறகு இருளில் வண்டிக்குள் உட்கார்ந்து நாம் பிரயாணம் செய்த காலத்தில், என் உடம்பு என் வசப்படாமல் மீறிப்போய்விட்டது. நீங்களெல்லோரும் இருக்கிறீர்களே என்று நினைத்து பகீரதப் பிரயத்தனம் செய்து என் ஆசையை அடக்கிக் கொண்டேன். ஆனாலும், ஒருவிதமாகப் பாசாங்கு செய்தேன்; வழிப் பிரயாணத்தினால் அலுத்துத் தளர்வடைந்து தூங்கி விழுகிறவள் போல நான் ஆடி ஆடி இவருடைய தோளின்மேல் என்னுடைய தலையைக் கொண்டுபோய் பல தடவைகளில் வைத்தேன்; கன்னத்தைத் திருப்பி அவருடைய கன்னத்தில் வைத்தேன். தனம்:- (அளவற்ற ஆச்சரியமும் திகைப்பும் அடைந்து) ஒகோ காரியம் அவ்வளவு தூரம் நடந்ததா! உங்களுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த எனக்கு ஒன்றும் தெரியாமலே நீ இவ்வளவு காரியம் பண்ணியிருக்கிறாயே! அவர் உன்னுடைய