பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 171 கடந்து ஏழாவது உப்பரிகையில் இருந்த இளரவரசரது கந்தர்வ மகாலை அடைந்தனர். அதன் வாசலில் சில அந்தரங்க மெய்க்காவலர் நின்று கொண்டிருந்தனர். பூர்ணசந்திரோதயத்தை அழைத்துச் சென்ற பாராக்காரன்அங்கிருந்த மெய்க்காவலரிடம் நெருங்கி, காதோடு ரகசியமாகச் சில வார்த்தைகள் சொல்ல, அவர்களது தலைவன் பூர்ணசந்திரோதயத்தை வணங்கி உபசரித்து வரவேற்று, அவ்விடத்தில் இருந்த ஒரு ஸோபாவில் ஒரு நிமிஷ நேரம் உட்கார்ந்துகொள்ளும்படியும் அவளது பெயரைத் தெரிவிக்கும் படியும் வேண்டிக்கொள்ள பூர்ணசந்திரோதயம் தனது பெயரை வெளியிடாமல், 'நீ மகாராஜாவிடத்தில் என்னுடைய பெயரைச் சொல்லவேண்டும் என்பதில்லை. இன்றையதினம் இரவு ஒன்பதுமணிக்கு வரச்சொன்ன மனிதர் வந்திருப்பதாகச் சொல். அதுவே போதுமானது' என்றாள். உடனே அந்த மெய்க் காவலன் உள்ளே போய்விட்டான். பூர்ணசந்திரோதயம் ஸோபாவின் மீது உட்கார்ந்து கொண்டாள். ஆனாலும், அவள் அதிக நேரம் காத்திருக்க வில்லை. உள்ளே போன மெய்க்காவலன் இரண்டடொரு நிமிஷத்தில் திரும்பிவந்து, முன்னிலும் அதிக பயபக்தியோடு கைக்கட்டி வாய் புதைத்து, 'அம்மணி மகாராஜா தங்களுடைய வருகையை எதிர்பார்த் திருக்கிறார். தாங்கள் தயை செய்து உள்ளே போகலாம் ' என்று நயந்து கூற, அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் உடனே எழுந்து வாசல் கதவைத் திறந்து மறுபடி மூடிக்கொண்டு நவரத்ன மணிமண்டபமான அந்த கந்தர்வ மகாலுக்குள் நுழைந்தாள். சுவர்க்கலோகமே அந்த வடிவாக வந்திருந்ததோ என அவள் சந்தேகித்து மயங்கும்படி அவ்வளவு அழகாகவும் புதுமையாகவும் அலங்கரிக்கப்பட்டு மருங்காபுரி ஜெமிந்தாரது வெல்வெட்டு மாடம், ரதிகேளி விலாசம் முதலிய அற்புத மாடங்களைக் காட்டிலும் பதினாயிரம் மடங்கு அதிக வசீகரமாக அமைக்கப்பட்டிருந்த