பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 9 செய்துகொண்டு விடவேண்டுமென்ற தீர்மானம் செய்து கொண்டவராய், இளரவரசர் பெட்டிவண்டியை நேராக வடக்கு ராஜவீதிக்கு விடச் செய்தார். தம்மை மறைத்திருந்த பனாரீஸ் பட்டு அங்கியை விலக்கி வண்டிக்குள் போட்டுவிட்டு, மருங்காபுரி ஜெமீந்தாரது மாளிகையின் வாசலில் போய் இறங்கி உள்ளே சென்று, உப்பரிகையில் வெல் வெட்டு மாடத்திலிருந்து தமது வருகையை ஆவலோடு எதிர்பார்த் திருந்த கிழஜெமீந்தாரிடம் போய்ச் சேர்ந்தார். 14-வது அதிகாரம் ரதிகேளி விலாசம் - எலிப்பொறி மிகுந்த ஆவலும் சஞ்சலமுமடைந்து உட்கார்ந்திருந்த மருங்காபுரி ஜெமீந்தார் இளவரசரை அன்பாக வரவேற்று உபசரித்து ஒர் உன்னத ஆசனத்தில் உட்காரச்செய்ய, இளவரசர் அன்பும், மகிழ்ச்சியும் புன்னகையும் ஜ்வலித்த முகத்தினராய்க் கிழவரை நோக்கி, “ஜெமீந்தார் ஐயா! உங்கள் வீட்டுவாசலில் நான் வண்டியை விட்டு இறங்கியபோது என் மனசில் சடேரென்று ஒர் எண்ணம் உண்டாயிற்று. அதை நான் முதலில் உங்களிடம் சொல்லி விடுகிறேன். ஏனென்றால், நாம் மற்ற விஷயங்களை முதலில் பேச எடுத்துக் கொண்டால் இது மறந்து போகும். ஆகையால், என் மனசில் தோன்றிய நினைவை முதலில் சொல்லிவிடுகிறேன்' என்று இனிமை யாகப் பேசினார். அதைக் கேட்ட கிழவர், 'உங்களுடைய பிரியப்படியே ஆகட்டும். அதையே சொல்லுங்கள் என்றார். இளவரசர், 'வேறொன்றுமில்லை. மைசூர் முதலிய மற்ற ராஜ்யங்களில் மகாராஜாக்களுக்கு அந்தரங்க நண்பர்களாக இருந்து பலவகையில் உதவிகள் செய்துவரும் ஜெமீந்தார்