பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 87 ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் நான் எப்படி வெளியிடப் போகின்றேன். அன்றையதினம் கபட சன்னியாசியால் உனக்கு நேரிட்ட மகா பயங்கரமான அபாயத்திலிருந்து உன்னைக் காப்பாற்ற ஈசுவரன் இந்த மனிதரை ஏன் தேர்ந்தெடுத்தார் என்ற விஷயம் எனக்கு இப்போதுதான் நன்றாக விளங்குகிறது. உன் விஷயத்தில் சகலமான உரிமைக்கும் பொறுப்புக்கும் இந்த மனிதரே சொந்தமானவர் ஆகப்போகிறார் என்பதைக் கருதியே ஈசுவரன் அன்றையதினம் இவரைக் கொணர்ந்து விட்டார் என்பது விசிதமாகத் தெரிகிறது. நம்முடைய குடும்பத் தலைவியான அத்தை பேசமாட்டாமல் நோயாளியாக இருப்பதால், இந்த விஷயத்தைப் பற்றி தாம் அத்தையிடத்தில் பிரஸ்தாபிக்க வில்லையென்றும், நானே இப்போது இந்தக் குடும் பத்துக்கு தலைவியான மனிஷி. ஆகையால் இந்த விஷயத்தைப் பற்றி எனக்கு எழுதி இருப்பதாகவும் அவர் என்னை உயர்த்தி எழுதியிருக்கிறார். அவருடைய தாய் தகப் பன்மார் இறந்து போய் நெடுங்காலம் ஆயிற்றாம். திருவாரூரில் அவருக்கு ஒரு மாளிகையும் பூஸ் திதியும் இருக்கின்றனவாம். அவருடைய நெருங்கிய உறவினர்கள் மகா பிரபுக்களாகத் தஞ்சையிலிருக்கின்றனராம். ஆனால், தான் மாத்திரம் தனது சொத்துக்களைப் பார்த்துக் கொண்டு திருவாரூரில் ஏகாங்கியாக இருக்கிறாராம். இந்த இரண்டு மாச காலமாக அவர் நம்முடைய பங்களாவுக்கு வந்து உங்களோடு பழகிப் பார்த்ததில், உன்னுடைய குணாதிசயங்கள் எல்லாம் அவருக்கு நிரம்பவும் திருப்திகரமாக இருக்கின்றனவாம். நீ நிராதரவாகத் தனிமையில் இருப்பதைக் கருதியும், அவருக்கும் வேறே யாருமில்லாததைக் கருதியும், அவர் உன்னைக் கலியாணம் செய்துகொண்டு சகலமான விஷயங்களிலும் உரிமை பெற்றவராய் உன்னைப் பாதுகாக்க வேண்டும் என்று அவருடைய மனம் விரும் புவதால், அந்த விஷயத்தில் உன்னுடைய அபிப்பிராயத்தையும் கேட்டறிந்து கொண்டு தமக்கு முடிவான மறுமொழி எழுதி அனுப்பும்படி கேட்டுக்