பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்


பந்தோபஸ்தான இடத்தில் வையுங்கள்' என்று கட்டளை பிறப் பித்துவிட்டுத் தமது அரண்மனைக்குப் போய்விட்டான்.

அங்கிருந்த தாசில்தார் முதலிய எல்லா உத்தியோகஸ்தர்களும் இதர சிப்பந்திகளும் உடனே சிறைப்படுத்தப் பட்டார்கள். அந்தக் கச்சேரியும் மூடிக்காவல் போடப்பெற்றது. அரசன் அந்த அதிசய மான விவரங்களையெல்லாம் கண்டு கவர்னர் ஜெனர லுக்கு ஒர் அவசரமான கடிதம் எழுதியனுப்பிவிட்டு அவரது முடிவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். திவானோ இரவு பகல் தூங்காமலும், தண்ணிர் அருந்தாமலும் அதே விசாரமாகவும் கவலையாகவும் இருந்து துரும்பாய் மெலிந்து போனதன்றி, தம்மாலான வரை பிரயத்தனம் செய்து அதன் உண்மையைக் கண்டுபிடிக்க முயன்றதெல்லாம் எள்ளளவும் பலிக்காமலே போயிற்று. கவர்னர் ஜெனரலுடைய மறுமொழி கிடைத்தது. திவான் தம்முடைய கச்சேரியிலிருந்து அனுப்பப் பட்டாரானாலும், அவர் எப்போது முதல் அந்த சமஸ்தானத்தில் குடியேறினாரோ அது முதல் அந்த சமஸ்தானத்து ஜனங்களுள் ஒருவர் ஆகி விட்டமையால், அவர் ஏதேனும் குற்றம் செய்திருந்தால், அவரை அந்த சமஸ்தானத்துச் சட்டங்களின்படி சுயேச்சையாய் தண்டிக்க மகாராஜனுக்கு அதிகாரம் உண்டென்றும், அவரை சட்டப்படி மகாராஜன் நடத்திக்கொள்ளலாம் என்றும் கவர்னர் ஜெனரல் எழுதிவிட்டார். திவான் கேட்டுக்கொண்டபடி எட்டாவதுநாள் முடிகிற வரையில் அரசன் பொறுத்திருந்து, ஒன்பதாவதுநாள் தமது சபையைக் கூட்டித் தாமும் வந்து ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். அந்த அற்புதமான வழக்கு எப்படி முடியுமோ என்பதை அறியும் பொருட்டு அந்த நகரத்து ஜனங்கள் எல்லோரும் இலக்ஷக்கணக்கில் வந்து சபா மண்டபத்திற்கு எதிரில் நெருங்கி நின்றனர். திவானும், ரெவினியூ தாசில்தார் முதலிய மற்ற கைதிகள் எல்லோரும் அழைத்து வந்து வரிசையாக நிறுத்தப்பட்டனர். உடனே அரசன் திவானை நோக்கி 'என்ன திவானே உண்மையைக் கண்டு பிடித்தீரா” என்றான்.

துரும்பிலும் கேவலமாக மெலிந்து நடைபிணம் போலக் காணப்பட்ட திவான், மகாராஜாவே! நான் என்னாலான பிரயத்தனங்களை எல்லாம் செய்து பார்த்துவிட்டேன். உண்மை

68