பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 283 சுயநலத்தையும் எதிர்பாராமல் அபாரமான துன்பங்களுக்கு ஆளாகி, நீ பரோபகாரம் செய்ய முயற்சித்தவள். ஆகையால், அப்படிப்பட்ட உத்தமகுணம் உள்ளவளான உன்னை நான் காப்பாற்றாமல் அநாதையாக விட்டுவிட்டால், என்னைவிடக் கேவலம் சண்டாள மனிதன் இந்த உலகில் வேறே எவனும் இருக்க மாட்டான். எனக்குத் திருவாரூரில் சொந்த வீடு ஒன்று இருக்கிறது. நீயும் என்னுடைய வேலைக்காரியுமாக நாளைய தினம் புறப்பட்டுத் திருவாரூருக்குப் போய் என்னுடைய வீட்டில் பத்திரமாகவும் சுகமாகவும் இரு. நான் பூனாவிலிருந்து திரும்பி வருகிற வரையில், என் வேலைக்காரி உன்னை நிரம் பவும் பட்சமாகக் காப்பாற்றுவாள். திருவாரூருக்குப் பக்கத்திலுள்ள ஒரு பங்களாவில் ஷண்முகவடிவு என்று ஒரு பெண் இருக்கிறாள். அந்தப் பெண்ணை நான் கட்டிக் கொள்வது என்று தீர்மானம் ஆகியிருக்கிறது. நான் பூனாவுக்குப் போக நேர்ந்தால் சில மாசகாலம் வரையில் எங்களுடைய கலியாணம் தடைப்படும்போல இருக்கிறது. நீயும் என் வேலைக்காரியும் அடிக்கடி அந்தப் பங்களாவுக்குப் போய், ஆண் துணை யில்லாமல் தனியாக இருக்கும் அந்தப்பெண்ணுக்குத் துணை இருந்து, என்னைப் பற்றி அவள் விசனப்படாமல் பார்த்துக் கொண்டிருங்கள். எல்லாவற்றிற்கும், நான் இப்போது சுருக்கமாக ஒரு கடிதம் எழுதி தபால் மூலமாக ஷண்முக வடிவுக்கு அனுப்பி வைக்கிறேன். நான் அம்மன்பேட்டைக்குப் போய்த் திரும்பி வந்து விவரமான ஒரு கடிதம் எழுதி உங்களிடம் கொடுக்கிறேன். அதைத் தபால் மூலமாக அனுப்புவது சரியல்ல. அது வேறே யாரிடமாகிலும் போய்ச் சேர்ந்தால், காரியம் கெட்டுப் போகும். நான் பூனாவிலிருந்து திரும்பி வந்தவுடன் என்னுடைய கலியாணத்தை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறேன். அதன்பிறகு உனக்கும் உங்கள் ஜாதியைச் சேர்ந்த ஒரு தக்க இடம் பார்த்து, உன்னையும் கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். நீ உன் பழைய தொழிலை விட்டு குடும்ப ஸ்திரீயாக இருந்து கண்ணிய