பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பாவேந்தர் படைப்பில் அங்கதம்-டு) சிறுவர், சிறுமியர் தேசியகீதம் பாரதியின் அரையுருவப் படமும், கருத்து விளக்கப் படங்களும் கொண்டு, நாலணா விலையில் வெளியிடப்பட்டது. நல்ல வர்ண மெட்டுக்களில் தேசிய கீதங்கள், தேசிய விடுகவிகள், தேசியத் தாலாட்டுகள், தேசிய விளையாட்டுப் பாடல்கள், சிட்டுக்குருவிப் பாட்டு, நிலாப்பாட்டு, நாய்ப்பாட்டு, தேசியக்கப்பல், தேசியக் கல்யாணப்பாடல்கள் என்பவை அத்தொகுப்பில் அடங்கும். ஆத்திகராக அன்று விளங்கிய இளைய பாரதிதாசனுக்குக் காந்தியடிகளின் பிறப்பு ஒர் அதிசய நிகழ்ச்சியாகப்பட்டது. இறைவன் அனுப்பிய பரிசுத்த ஆவி இயேசுவாக அவதரித்தது போல், இறைவனின் அருட் பேரொளியே காந்தியாக அவதரித்தது என்பதைக் குறுகிய செயலில் வையம் குதித்தது; கரைக்கு மீள இறையவன் அருளின் காந்தி எழுந்தது புவியில் நெஞ்சே! என்று பாடுகிறார். அன்னியர் நூலைத் தொடோம் என்றசேதி அறைந்திடடா புவி முற்றும் - எங்கள் அறுபது கோடி தடக்கைகள் ராட்டினம் சுற்றும் சுற்றும் சுற்றும்! இன்னல் செய்தார்க்கும் இடர்செய்திடாமல் இராட்டினம் சுற்றென்று சொல்லும் - எங்கள் ஏதமில் காந்தி யடிகள் அறச் செயல் வெல்லும் வெல்லும் வெல்லும்! கன்னலடா எங்கள் காந்தியடிகள் சொல் கழறுகிறேன் அதைக் கேளே - நீவின் கதரணிவீர் உங்கள் பகைவரின் வேரங்குத் துரளே துரளே துரளே!