பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பாவேந்தர் படைப்பில் அங்கதம்-இ என் பார்வையின் மெல்லிய பாதங்கள் உன்மேல் படர்கையில் கிழிந்து போயின உன் அருவருப்பு உருவம் கண்டு என் மோன பிம்பங்கள் ஆயிரமும் காலங்களும் இடங்களும் கனவுகளும் வீட்டுள் நீளும் நெடுஞ்சாலை முனைகளும் தம்மில் நிறுத்தி வைக்க: வாழ்க்கைக் கண்ணாடியில் வடிவு காட்டும் என் - மோன பிம்பங்கள் ஆயிரமும் அலறுகின்றன உன் கறைப் பற்களின் இருண்ட சிரிப்பில் அழுக்காகிறேன் எவ்வளவிடினும் நிரம்பாத உன் ஒட்டைப் பாத்திர நாற்றத்தில் என் சுவாசங்கள் கூசுகின்றன உன் கைத்தடித்தாளம் ஏன் ரத்த நாடிகளில் எதிரொலிக்கிறது. உன் விழிக் கொள்ளிகள் ஏன் நரம்புகளில் நெருப் பிடுகின்றன உன் நிழல் என் வாசலைச் சுவராக்குகிறது கொடுப்பவர்கள் வறண்ட பின்னும்