பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பாவேந்தர் படைப்பில் அங்கதம் -25) பலிபீட ஆராதனை, அறை கூவல் யாவும் இதில் இடம் பெற்றுள்ளன. தமிழில் அங்கதத்தைச் சிறுகாப்பிய வடிவில் முதன் முதலாகக் கையாண்டு வெற்றிகண்டவர் பாரதிதாசன். இவர் எழுதியுள்ள சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ 1930 ஆம் ஆண்டில் இவருடைய நண்பரான நோயல் என்பவரால் வெளியிடப்பட்டது. தேசிக விநாயகம் பிள்ளை எழுதியுள்ள மருமக்கள் வழி மான்மியம்’ என்னும் நூலும் ஒர் அங்கதக் காப்பியம். இது 1942ஆம் ஆண்டு வெளிவந்தது. மேலைநாட்டு அங்கதக் காப்பியப் பண்புகளான அதீத கற்பனை, எள்ளல், குற்றங்கடிதல், சமுதாய சீர்திருத்தம் யாவும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலும் இடம் பெறுகின்றன. நம்பத் தகாத மடமையை நம்பத்தகாத கற்பனை மூலமே இவர் சாடுகிறார். இந்நூலில் உள்ள குறிப்பிடத்தக்க சிறப்பு என்னவென்றால், அஞ்சாமையும் துணிச்சலும் மிக்க பெரியாரின் தர்க்கரீதியான கம்பீரப் பேச்சுநடை (Oratorial poetry) கவிதை வடிவில் இக்காப்பியத்தில் ஆட்சி செய்கிறது. சஞ்சீவிபர்வதத்தின் சாரலில் குப்பன் என்ற வேடக்குமரன், தன் காதலி வஞ்சியை எதிர் நோக்கிக் காத்திருக்கிறான். அவள் வந்ததும் அவளை அணைக்கத் தாவுகிறான். அவளோ, அவனைத் தடுத்து ஒதுங்குகிறாள். குப்பன் காரணம் கேட்கிறான். “இக்குன்றத்தின் மீது இரண்டு மூலிகைகள் இருக்கின்றன. ஒன்றைத் தின்றால் உலக மக்கள் பேசும் பேச்சுக்களைக் கேட்கலாம். மற்றொன்றைத் தின்றால் மண்ணுலகக் காட்சியெல்லாம் இங்கிருந்தபடி கண்ணெதிரில் காணலாம். அவ்விரண்டையும் பறித்துக் கொடு முத்தம் பிறகு' என்று கண்டிப்பாகக் கூறுகிறாள்.