பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் வெள்ளைத்துரை உடைபோ லுடுப்பீர்மயிர் வெட்டிக்கொள்வோம் தமிழ்துப்பிச் செல்வோம் - எனத் துள்ளுது மற்றொரு நாகரிகம் இதிற் சொக்குதல் பற்பலர் பாரதமே செந்தமி Nற்பெயரிட் டறியாக் கொடு தேயிலை காப்பியை முப்பொழுதும் - உண்டு வந்தனை செய்யென நாகரிகமொன்று வல்லமை காட்டுது பாரதமே. வெள்ளை வயித்தியம் தெய்விகமாம் - அதை வேண்டி அழைப்பது செய்தவமாம் உள்ள மகிழ்ந்து குதிக்குதிங்கே - புலை ஊனர் விரும்பிய நாகரிகம் என்று கடுமையாகச் சாடுகிறார். "பணம் படைத்தவர்கள் பசுபாலனத்தில் சேவை யுணர்ச்சியோடு ஈடுபட வேண்டும். கயலாபமும் சுரண்டலும் இதில் கூடாது. பசுபாலனம் எளிதன்று. அந்நிய ஆட்சியை இந்தியாவிலிருந்து அகற்றுவதைவிட இது கடினமானது” என்று பசுபாலனம் பற்றிக் கூறியுள்ளார் காந்தியடிகள். அக்கொள்கையை அப்படியே ஏற்றுக் கொண்ட பாரதிதாசன், தமிழ் இலக்கண இலக்கியங்களிலிருந்து ஆநிரை பற்றிக் கூறிய கருத்துக்களை மேற்கோளாக எடுத்து ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளார். மடியினில் பால்சுமந்தே மாந்தருக்களித்திட வருகின்ற தாய், என்றும் மோரொடு சுளைத்தயிரும் - மணம் மொகு மொகு மொகுவென நெய்ப்பயனும் தருகின்ற தாய் என்றும் குவலயம் தனக்கொரு செவிலி என்றும் பசுவைப் பலபடப் பாராட்டுகிறார் பாவேந்தர்