பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130; முருகு அந்தரம் 一图 இத்தாலியில் உள்ள ரோமும், வெனிசும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கலைக் கருவூலங்கள். அந்த நகரங்களின் அழகைக்கண்டு களிக்க உலகமே திரண்டு செல்கிறது. முதன் முதலில் பிரெளனிங் இத்தாலி சென்றபோது அங்குள்ள கலைச் செல்வங்களைக் கண்டு மகிழ்ந்தாலும், அவனது தாய் நாடான இங்கிலாந்தின் நினைவு தான் அவன் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. “GauGứìg;Ti'-Ig Gi, cửt'-(ỹ ##ssšrsự3,ạir” (Home Thoughts from Abroad) என்று ஒரு பாடலை எழுதுகிறான். ஓ! இது ஏப்ரல் திங்கள்! நான் இப்போது இங்கிலாந்தில் இருக்க வேண்டும். காலையின் கண் விழித்ததும் பட்டுத் தளிர் போர்த்திருக்கும் எல்ம் மரத்தின் தாழ்ந்த கிளைகளிலமர்ந்து சிட்டுக்கள் கீச்சிடும் குரலை இளமரக் காடுகள் எங்கும் கேட்கலாம் மேமாதம் தொடங்கியதும் வெண் கழுத்துப் பறவைகள் வேலியில் கூடுகட்டும் பூரித்துப் பூக்கும் பியர்மரங்கள் குனிந்து நின்று பனித்துளிகளை மலர்களோடு பழனத்தில் துரவும் லார்க் என்னும் இசைப் பறவை ஒவ்வொரு பாட்டையும் இரண்டு முறை பாடும், முதலில் பாடியது மறந்துவிடக் கூடாது என்பதற்காக.