பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம்-23) வடநாட்டு இலக்கியங்களில் இராதை பேசப்படும் அளவுக்கு நப்பின்னை பேசப்படுவதில்லை. பாகவதம் பத்தாவது காண்டத்தில் நப்பின்னையின் திருமணமும் கூறப்பட்டுள்ளது. நப்பின்னை கிருஷ்ணன் தேவியருள் ஒருத்தி. நீளா தேவியின் அவதாரம். நீளாதேவி விஷ்ணு மூர்த்தியின் சக்தி. என்று பாகவதம் குறிப்பிடுகிறது. பாகவதத்தில் நப்பின்னையின் திருமணம் கீழ்க்கண்டவாறு விவரிக்கப்பட்டுள்ளது. மிதிலை நகரில் கும்பகன் என்ற ஆயர் தலைவன் வாழ்ந்து வந்தான். அவன் மகள் நப்பின்னை. அவன் ஆநிரையில் ஏழு கொடிய முரட்டுக் காளைகள் இருந்தன. காலநேமி என்ற அரக்கன் மக்களே காளைகளாக உருவெடுத்துக் கும்பகன் ஆநிரைக்குள் புகுந்து ஊர் மக்களுக்கும் பசுக்களுக்கும் பெருந் துன்பம் விளைவித்துக் கொண்டிருந்தனர். அந்நகர் மன்னன் அந்த ஏழு காளைகளையும் கொல்லும்படி ஆணையிட்டான். ஆயர் தலைவனான கும்பகனும் அக்காளைகளைக் கொல்பவனுக்கு தன் ஒரே செல்வமகனான நப்பின்னையைத் திருமணம் செய்து கொடுப்பதாகப் பறையறைவித்தான். கிருஷ்ணனும் பலராமனும் அக்காளைகளைக் கொன்றனர். நப்பின்னை கிருஷ்ணனுக்கு மாலை சூட்டினாள். நெல்லிநகர் அருளாள தாசரென்னும் வரதராச ஐயங்கார் இயற்றிய பாகவதத்திலும் நப்பின்னை திருமணம் கூறப்பட்டுள்ளது. காளையை அடக்கி ஆயர் குலப் பெண்ணை மணக்கும் வழக்காறு, தமிழர்களிடையே தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது.