பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

酉 لاسه முருகு சுந்தரம் 一函 இவருடைய தனிச்சிறப்பு மனப்பாடம். அதே ஊரில் வாழ்ந்த மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பல நூல்களைக் கடவுள் துணையிலிருந்து முற்றிற்று” வரையில் மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றல் மிக்கவர். இவரும் தமது காப்பியமான கந்தர்வ கானத்தை' மேடையில் மனப்பாடமாக உணர்ச்சி பொங்கப்பாடுவார். ஆனால் இவர் சேலம் வந்திருந்தபோது, நாங்கள் பலமுறை விரும்பிக் கேட்டும் கந்தர்வகானத்தைப் பாட மறுத்து விட்டார். ஏன்? என்று வினவினோம். அதற்கு அவர் கூறிய காரணம் உள்ளத்தைப் பிழிவதாக இருந்தது. “அதை ஒருவரிடம் ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்துவிட்டேன். அக்கடன் தீரும் வரை மேடையில் பாடுவதில்லை - என்று அவருக்கு வாக்கு அளித்திருக்கிறேன்; அதை மீறமாட்டேன்’ என்றார் திருலோகம் கந்தர்வ கானமும், உதயம் என்ற சிறிய கவிதைத் தொகுப்பும் இவரது படைப்புகள். ‘சித்தார்த்தன்” என்ற ஜெர்மன் புதினத்தைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இலக்கியப்படகு என்பது இவரது கட்டுரை நூல் பாரதி, பாரதிதாசன் பாடல்களை வெண்கலக் குரலில் ஏற்ற இறக்கத்தோடு இவர் பாடும்போது மேடை அவர் வசப்பட்டு மெய்மறந்திருக்கும். பாரதியைப் பற்றி ஆங்கிலத்திலும் பேசுவார். 1946 ஆம் ஆண்டு பாரதிதாசன் நிதியளிப்பு தொடர்பான சர்வகட்சிக் கூட்டமொன்று திருச்சி பிஷப் ஹீபர் மைதானத்தில் நடைபெற்றது. அதில் திருலோக சீதாராமும் கலந்து கொண்டு பாரதிதாசனின் கவிதை நயங்களை விமர்சித்துப் பேசினார். அதைக் கேட்டு வியந்த அறிஞர் அண்ணா அக்கிரகாரத்து அதிசயப் பிறவிகளுள் இவரும் ஒருவர்' என்று பாராட்டியதோடு, பாவேந்தரைப்