பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் 175 விழாக்கள் மூலமும், நூல் வெளியீடுகள் மூலமும் பரப்பி, சன்மார்க்க இயக்கத்துக்குப் புத்துயிர் கொடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இம்முயற்சி போதாது. எந்த ஓர் இயக்கமும் பரவலான அமைப்பு ரீதியில் இயங்காவிட்டால் வளர்ச்சி பெறாது. கிறித்தவப் பாதிரிமார்களைப் போல, இராமகிருஷ்ண மடத் துறவிகளைப் போலத் தன்னார்வத் தொண்டர்கள். சன்மார்க்க இயக்கத்துக்குத் தங்களை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ள வேண்டும் ஊரன் அடிகளைப் போல இன்னும் இருபது பேராவது துறவுநிலை. மேற்கொண்டு வள்ளலாரின் கொள்கையைப் பரப்ப முன் வரவேண்டும் மாவட்டந்தோறும் கல்விக் கூடங்களோடு கூடிய சன்மார்க்க சங்க வளாகங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும். அவை யாவும் ஓர் அமைப்பாக இயங்க வேண்டும். வள்ளலாரின் சன்மார்க்க இயக்கம் தமிழர்களுக்காகத் தமிழ்ப் பண்பாட்டில் ஊறிப் பிறந்த இயக்கம். இந்த இயக்கத்தை வளர்க்கும் முயற்சியில் இன்னும் பல அருட் செல்வர்கள் பங்கேற்க வேண்டும். வள்ளலார் மூட்டிய அடுப்பு நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்வதாலோ, நாள்தோறும் ஐம்பது பேருக்கு அன்னதானம் வழங்குவதாலோ அருட்பிரகாச வள்ளலாரின் நோக்கங்கள் முற்றுப் பெறா. நாராயண குருவின் அணுகுமுறை தமிழ்நாட்டுச் சன்மார்க்கிகளின் உள்ளத்தில் உருவாக வேண்டும்.