பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் 469 புரட்சித் துறவிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டு மூன்று பெரும் ஞான குருக்களைப் பாரதத்தில் தோற்றுவித்தது. வடக்கில் இராமகிருஷ்ணர், தெற்கில் வடலூர் இராமலிங்க அடிகளும், நாராயண குருவும். தமிழகத்தில் தோன்றிய வள்ளலாரும், கேரளத்தில் தோன்றிய நாராயண குருவும் எதிர்கொண்ட ஆன்மீகச் சிக்கல்களும் சமூகச் சிக்கல்களும் ஒரே மாதிரியானவை. சாதியின் பேராலும், மதத்தின் பேராலும் ஒடுக்கப்பட்ட மக்களினமும், அவர்களை ஆட்கொண்ட அச்சமும் மடமையும் இவர்கள் போராட்டக் களங்களாயின. வள்ளலாரைப் போலவே எளிய குடும்பத்தில் நாராயண குருவும் பிறந்தார். இருவருமே திருமண வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். தம்மை வளர்த்து ஆளாக்கிய தமையனார் குடும்பத்தின் வற்புறுத்தலுக்கு ஆட்பட்டுத் திருமணம் செய்து கொண்டார் வள்ளலார். நாராயண குருவோ திருமணத்துக்கு முதல்நாள் இரவு, வீட்டைவிட்டே ஓடிவிட்டார். ஆனால் கேரளநாட்டு ஈழவர் குல வழக்கப்படி மணமகளுக்கு இவருடைய தமக்கையார் தாலிகட்டி வீட்டிற்கு அழைத்து வந்தார். வள்ளலாரும் நாராயண குருவும் தம் மனைவியர்க்கு ஞானோபதேசம் செய்துவிட்டுத் துறவு வாழ்க்கையை மேற்கெர்ண்டன்ர்.